அம்மா இருசக்கர வாகன திட்டம் விண்ணப்பிக்க
அட்மின் மீடியா
0
அம்மா இருசக்கர வாகன திட்டம் மானியம் பெற ஜூன்
20ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
இதற்கான
விண்ணப்பங்களை, அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
பேரூராட்சி அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அளிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு, மாவட்டத்திலுள்ள அனைத்து
ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர்
அலுவலகங்களில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்
எளிதாக இயக்கக்கூடிய (Gearless/Auto geared)
கியர்லஸ்/ஆட்டோகியர் இருசக்கர வாகனங்களை இத்திட்டதின் கீழ் வாங்கலாம்.
மேலும், மாற்றுத்திறனாளி மகளிர் இணைப்பு
சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களும் வாங்கலாம்.
மகளிருக்கு வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது
ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
மேலும்
விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய
மேலும்
விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய
மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
* பிறந்த தேதிக்கான சான்றிதழ்
• இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - நகல்.
• வேலை வழங்கும் அலுவலரால்/நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான
சான்றிதழ் அல்லது சுய வருமானச் சான்றிதழ்.
• ஆதார்
அடையாள அட்டை.
• எட்டாம்
வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள்.
• புகைபடம்.
• சிறப்புத் தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ்.
• சாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் )
• இருசக்கர
வாகனத்தின் விலைப்புள்ளி.