எல்ஜசி பாலிசி செய்தி உண்மையா
அட்மின் மீடியா
0
எல்ஐசி பாலிசி செலுத்துவோர், ஓரிரு தவணை செலுத்திவிட்டு, பின்னர் எதிர்பாராத காரணங்களால், அதனை தொடர முடியாமல் பாதியிலேயே பாலிசியை கைவிடுவது வழக்கம். இது இந்தியா முழுவதும் நடைபெறும் கதைதான்.
இந்நிலையில், அப்படி பாதியில் கைவிடப்படும் பாலிசிகளுக்கு, பாலிசி முதிர்வுக் காலம், நீங்கள் இதுவரை செலுத்தியுள்ள பிரிமீயம்கள் இப்படி பலவற்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுப்பது வழக்கமாகும்.
எல்ஐசி பாலிசி குறைந்தபட்சம் ஓராண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு வரை பிரிமீயம் செலுத்தினால் மட்டுமே பலன் கிடைக்கும் என பல விதிமுறைகள் ஆரம்ப நிலையிலேயே சொல்லப்படும்.
நீங்கள் பிரிமீயம் செலுத்த தவறும்பட்சத்தில், அந்த பாலிசி கைவிடப்பட்டதாக, கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
எனினும், உங்களின் பாலிசி பணம் செலுத்திய வரையிலும், குறைந்தபட்ச பாதிப்புடன் திரும்ப கையில் கிடைக்க 2 வழிகள் மட்டுமே உள்ளன. பிரிமீயம் தொகை முழுவதையும் செலுத்தி, பாலிசியை நிறைவு செய்ய வேண்டும்.
முடியாத பட்சத்தில், உங்களின் பாலிசியை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சரண்டர் செய்து, குறிப்பிட்ட கட்டணத்தில், சரண்டர் தொகை பெற்றுக் கொண்டு, பாலிசியை விட்டு விலகலாம். இதுதான், பாலிசி செலுத்த முடியாத நிலையில் நீங்கள் செய்ய வேண்டியவை.
மற்றபடி, சமூக ஊடகங்களில் பகிரப்படும் இத்தகைய வதந்திகளை நம்பாதீர்கள்.
உண்மை இப்படியிருக்க, ஐஆர்டிஏ, எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளதாகவும், இதன்படி, சில பாலிசிகள் செலுத்தி பணத்தை ஏமாந்தவர்கள் உடனடியாக, உரிய பாண்ட்களை சமர்பித்து, பேங்க் வட்டியுடன் பிரிமீயம் தொகையை திரும்பப் பெறலாம் எனவும், இல்லை எனில் நீதிமன்ற வழக்கு தொடரலாம் என்று எந்த உத்தரவும் இதுவரை ஐஆர்டிஏ வெளியிடவில்லை.
இந்த வதந்தி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பரவி வருகிறது.
Tags: மறுப்பு செய்தி