இந்தியா திரும்ப தயார் ஜாகிர் நாயக் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இந்தியா திரும்ப தயார் ஜாகிர் நாயக் அறிவிப்பு
இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் இஸ்லாமிய ஆய்வு மையம் மற்றும் பீஸ் 'டிவி' ஆகியவற்றை நடத்துகிறார்.
சாகிர் நாயக் 1991ம் ஆண்டின் பின்னர் தனது இஸ்லாமிய ஆராய்ச்சி மூலம் இஸ்லாத்தின் உண்மை தன்மைகளை நிருபிக்க துவங்கினார். மத ஆய்வில் நன்றாகப் பாண்டித்தியம் பெற்று விளங்கிய இவர் திருக்குரான் ,இந்துமத வேதங்கள் ,கிறித்துவ , பைபிள்கள் மற்றும் பல புத்தகங்களையும் படித்து மனனம் கொண்டவர்.இவரின் இஸ்லாமிய அழைப்பு பணியால் பல மாற்று மதத்தினரை இஸ்லாமிய மதத்துக்குள் கொண்டுள்ளர்.2001 செப்டம்பர் முதல் 2002 ஜூலை வரை கடும் எதிர்ப்பில் அமெரிக்காவில் இஸ்லாமிய மதப் பிரச்சாரம் செய்து 34000 ம் அமெரிக்கர்களை இஸ்லாத்தை தழுவ காரணமாக இருந்தார்.
பல்வேறு நாடுகளில் இருந்து நிதி பெற்றது சம்மந்தமாக்க அமலாக்கத் துறை, இவர் மீது வழக்குகள் தொடர்ந்தது
ஜாகிர் நாயக் சொத்துகள் முடக்கப்பட்டது.
தற்போது ஜாகிர் நாயக், மலேஷியாவில் உள்ளார்
இவரை நாடு கடத்தி வர, மும்பை சிறப்பு நீதிமன்றம், கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
அவரை நாடு கடத்த மலேஷியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜாகிர் நாயக் வெளியிட்ட அறிக்கை:
என் மீது குற்றச்சாட்டுகள் மற்றும் புகார் இருந்தாலும், இந்தியாவிலோ அல்லது மற்ற நாடுகளிலிருந்தோ எனக்கு எதிராக எந்தவிதமான தீர்ப்பும் இது வரை வழங்கப்படவில்லை.
இந்திய விசாரணை அமைப்புகளின் வரலாற்றை அறிந்து, எனது வாழ்க்கையையும், எனக்கு உள்ள எஞ்சிய பணிகளையும் கெடுத்து கொள்ள நான் விரும்பவில்லை.
இந்திய விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டிலிருந்து விடுபட விரும்புகிறேன்.
ஆனால் அந்த அமைப்புகள் நான், குற்றவாளியா , இல்லையா என்பது பற்றி விசாரிக்காமல், என்னை சிறையில் அடைக்க நினைக்கின்றனர்.
மலேசியாவில், நான் விசாரணை அதிகாரிகளை சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளேன்.
இதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை.
விசாரணை இல்லாமல், குற்றச்சாட்டு இல்லாமல், என்னை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர்.
விசாரணை இல்லாமல், குற்றச்சாட்டு இல்லாமல், என்னை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர்.
இதனை பார்க்கும் போது, எனக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது.
இது போன்ற சூழ்நிலையில், என் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும் வரை, கைது செய்ய மாட்டோம். சிறையில் அடைக்க மாட்டோம் என சுப்ரீம் கோர்ட் எழுதி கொடுத்தால், இந்தியா வர தயாராக உள்ளேன்.
இந்திய நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செய்தி ஆதாரம்