நியூஸிலாந்தில் தாயும் மகளும் இஸ்லாத்தை ஏற்றார்களா
அட்மின் மீடியா
0
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஒரு பொய்யான செய்தியினை ஷேர் செய்து கொண்டு வருகின்றார்கள்.
அது நியூசிலாந்தில் இரண்டு மசூதிகளில் 50 முஸ்லிம்களைக் படுகொலை செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் ஒரு கிறிஸ்தவ தாய், மற்றும் அவரது இரண்டு மகள்களும் இஸ்லாத்தை ஏற்று தன்னை முஸ்லீமாக மாற்றிகொண்டனர்
எதிரிகளின் சதிகளால் வளர்ச்சியடையும் இஸ்லாம் ....
சுடச் சுட சுடர்விட்டு எரியும் இஸ்லாம்.!
என்று பதிவிட்டு அதனுடன் மூன்று பெண்கள் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் கிறுஸ்தவர்கள் கிடையாது
அவர்கள் மதமும் மாறவில்லை
அவர்கள் நியூஸிலாந்தும் கிடையாது
அதன் உண்மை தன்மை என்ன என்று இந்த பதிவில் பார்ப்போம்.
அந்த
புகைப்படத்தில் வரும் அந்த தாயும், இரண்டு மகள்களும் உடன் 11 இஸ்லாமிய பெண்களும் நியூயார்க் ஏர்போர்ட்டில் கடந்த ஜூன் 8, 2018 ஆம் ஆண்டு சிக்காகோ செல்வதற்காக பர்தா அணிந்தவர்களாக சென்றுள்ளார்கள்
புகைப்படத்தில் வரும் அந்த தாயும், இரண்டு மகள்களும் உடன் 11 இஸ்லாமிய பெண்களும் நியூயார்க் ஏர்போர்ட்டில் கடந்த ஜூன் 8, 2018 ஆம் ஆண்டு சிக்காகோ செல்வதற்காக பர்தா அணிந்தவர்களாக சென்றுள்ளார்கள்
மற்ற பயனிகளை விமானத்திற்க்கு அனுமதித்தவர்கள் எங்களை ஏளனமாக பார்த்த ஏர்போர்ட் ஊழியர்கள் எங்களுடன் வந்த 11 இஸ்லாமிய மாணவிகளையும் பதவி துஷ்பிரயோகம் செய்து கண்ணாடி அறையில் மற்ற பயணிகள் பார்க்கும் அளவிற்கு இவர்களின் உடமைகளை கலைத்து சோதனை செய்துள்ளனர்.
நாங்கள் இஸ்லாமியர் என்பதாலும் புர்கா போட்டதாலும் எங்களை மிருகத்தை விட கேவலமாக நடத்தினார்கள்
சக பயணிகள் ஏளனமாக சிரித்தும், சிலர் வேடிக்கையாகவும் பார்த்துள்ளனர்.
அதை தொடர்ந்து நீங்கள் போட்டோவில் பார்க்கும் தாயும், தனது இரட்டை மகள்களும், ஊழியர்கள் மீது நஷ்ட ஈடாக 1 மில்லியன் டாலர் கேட்டு வழக்கு பதிவிட்ட சம்பவம் மேற்கத்திய நாடுகளில் பெரிதும் பேசப்பட்டது.
அந்த நேரத்தில் பத்திரிக்கையில் வெளிவந்த அந்த மூவரின் போட்டோவை தான் தற்போது நம்மில் பலர் கடந்த 15.03.2019 நியூஸிலாந்து மசூதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு இஸ்லாத்தை ஏற்றனர் என்று உண்மை அறியாமல் பரப்பி வருகின்றனர்.
ஆதாரம்:
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
உண்மைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உடனே இணைவீர்
அட்மின் மீடியா குழுமத்தில்
அட்மின் மீடியா குழுமத்தில்
Link
Tags: மறுப்பு செய்தி