சங்கிலி பறித்தால் 10 ஆண்டு சிறை
அட்மின் மீடியா
0
சங்கிலி பறிப்பு திருடன்களுக்கு, 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கும், சட்ட திருத்தத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
நாடு முழுவதுமே, சங்கிலி பறிப்பு சம்பவங்கள்நடக்கின்றன.சங்கிலியை காப்பாற்ற போராடும் சிலருக்கு காயம் ஏற்படுகிறது.ஒரு சில இடங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது.
சங்கிலி பறிக்கும் திருடர்கள் மீது, 379வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இந்தப் பிரிவில், அதிகபட்சமாக, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், சங்கிலி பறிப்பு சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கடும் தண்டனை அளிக்க, குஜராத் அரசு முடிவுசெய்தது.
கடந்த செப்டம்பரில், 379வது பிரிவுடன், 379(ஏ) மற்றும் 379(பி) ஆகியபிரிவுகளையும் சேர்த்தது.
இந்த புதிய சட்டப் பிரிவுகளின்படி, சங்கிலி பறிப்பு திருடன்களுக்கு, குறைந்த பட்சம், 5 ஆண்டுகள் முதல், அதிக பட்சம், 7 ஆண்டுகள் வரை, சிறை தண்டனைவிதிக்கப்படும்.
மேலும், சங்கிலி பறிப்பின் போது, சங்கிலியை பறிகொடுத்தவருக்கு, காயம் ஏற்பட்டால், அதிகபட்சமாக, 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இதற்கான சட்ட திருத்தம், கடந்த,2018, செப்டம்பரில், சட்டசபையில் ஒரு மனதாக, நிறைவேற்றப்பட்டது.
பின், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது. குஜராத் மாநில அரசின், சட்ட திருத்தத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று ஒப்புதல் அளித்தார்