ஒருவர் விபத்தில் இறந்தால் அரசு 10 மடங்கு நஷ்ட ஈடு தர வேண்டுமா உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
ஒருவர் விபத்தில் உயிரிழந்தால், அவர் வருமான வரி செலுத்துபவராக
இருந்தால், மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டப்படி, அவருடைய வருட வருமான அடிப்படையில் 10 மடங்கு பணத்தை அரசு வழங்க வேண்டும்,’’ என்ற ஒரு செய்தியை பலரும் சமூக வலை தளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த செய்தி உண்மை என நம்பி ஆயிரக்கணக்கானோர்
ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை என்ன:
முதலில் இது உண்மை செய்திதானா என அறிய, மோட்டார் வாகனச் சட்டம் 166வது பிரிவு என்ன சொல்கிறது என பார்ப்போம்
ஒருவர் விபத்தில் உயிரிழந்தால் விபத்து இழப்பீடு பெற வேண்டும் எனில், விபத்து ஏற்படுத்திய நபர் மீதும் அதன் இன்சூரன்ஸ் கம்பெனி மீதும் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம்.
அங்கே உரிய நீதி கிடைக்காதபட்சத்தில்தான் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். அதற்குரிய ஆவணங்களும், நடைமுறைகளும் ஏராளம் உள்ளன.
ஆதாரம்
https://indiankanoon.org/doc/136948773/
மத்திய அரசுக்கும், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி