Breaking News

தனியார் பள்ளியில் இலவச சேர்க்கை..!

அட்மின் மீடியா
0
தனியார் பள்ளியில் இலவச சேர்க்கை..!




பொருளாதாரத்தில் நலிவடைந்து இருப்போர் எவ்வித கட்டணமும் இன்றி உங்களது குழந்தைகளை உங்கள் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்ததையடுத்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. சேர்க்கையில் 25 சதவிகித இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அந்தச் சட்டம் ஆகும்.

வரும் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து 

http://rte.tnschools.gov.in/tamil-nadu
.என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
குழந்தையின் புகைப்படம்,
பிறப்புச் சான்றிதழ்,
குடும்ப அட்டை,
வருமானச் சான்றிதழ்

ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையாக குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு செய்யப்படுவர்.


Give Us Your Feedback