Breaking News

புதிய புயல் ! நாளை முதல் கனமழை

அட்மின் மீடியா
0
இன்று முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அதிரடியாக அறிவித்துள்ளது.




வடஅந்தமான் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  எனவே நாளை முதல் வட கிழக்கு பருவமழை பெய்யகூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் சென்னைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது புயலாக மாறுவதற்கு 70 சதவீதம் சாத்தியம் உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும் காற்றழுத்த மண்டலமாகவே நீடித்தாலும் ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதிகள் மற்றும் ஒடிசாவுக்கு தான் கன மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் அக்டோபர் 12- ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேபோல  வங்கக்கடலில், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதிகளுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரு நாள்களுக்கு  மிதமான மழை பெய்யக்கூடும். 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

சென்னை மற்றும் புறநகரில்  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கபடுகின்றது 


மேலும் அதிகாரபூர்வமான் வானிலை செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://adminmedia1.blogspot.com/2018/10/blog-post_29.html 



தற்போதைய சாட்டிலட் காட்சியை காண  கீழே கிளிக் செய்யுங்கள்


https://adminmedia1.blogspot.com/2018/10/blog-post_15.html


மக்கள் நலனில் என்றும் அட்மின் மீடியா



அட்மின் மீடியா செய்திகள் தினமும் உங்கள் குருப்பில் வேண்டுமா?
கீழ் கண்ட நம்பரை உங்கள் குருப்பில் இணைத்து கொள்ளுங்கள்..
+917904540745 நாள்தோறும் அட்மின் மீடியா செய்திகள் உங்கள் குருப்பில்..*
 
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய வேண்டுமா கிளிக் செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2018/09/blog-post_10.html 



அட்மின் மீடியா

Give Us Your Feedback