Breaking News

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் எந்த ஊருக்கு போக எங்கே பஸ் ஏறணும் முழு பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் எந்த ஊருக்கு போக எங்கே பஸ் ஏறணும் முழு பட்டியல் இதோ

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எந்த ஊருக்கு போக எங்கே பஸ் ஏறணும்?



கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!

புதுச்சேரி, சிதம்பரம், கடலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

சிஎம்டிஏ காலனி பூங்கா அருகே கிளாம்பாக்கம்

வந்தவாசி, வேலூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம்

கும்பகோணம், தஞ்சாவூர், நாகை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்; மொத்தமாக 106 பேருந்துகள் அங்கிருந்து இயக்கு திட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையம் செல்வதற்கு 45 இலவச மாநகர பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம்

கிழக்கு கடற்கரைச் சாலை, வேலூர், பெங்களூர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

மாதவரம் புதிய பேருந்து நிலையம்

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback