மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்க நாணயம் + பட்டுப்புடவை பொங்கல் முதல் அண்ணன் சீர் திட்டம் அமல்
பொங்கல் முதல் அண்ணன் சீர் திட்டம் 8 கிராம் தங்க நாணயம் + பட்டுப்புடவை! முதல்வர் விஜய்-யின் 'அண்ணன் சீர்' திட்டம் -
தமிழக அரசின் திருமண உதவித் திட்டமான அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் 60,000 பட்டுப்புடவைகள் கொள்முதலுக்கான டெண்டர் விவரங்கள் வெளியாகியுள்ளன
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல்வர் விஜய் அறிவித்துள்ள அண்ணன் சீர்' திட்டம்.8 கிராம் தங்கம், பட்டுப் புடவையுடன் 'அண்ணன் சீர்' திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
தங்கத்திற்கான டெண்டர் 7.12.2026 அன்றும், பட்டுப்புடவைக்கு 8.12.2026 அன்றும் திறக்கப்பட உள்ளது.
அதாவது டிசம்பர் மாதமே பணிகள் தொடங்கி, பொங்கலுக்குள் மக்களுக்கு வழங்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, "என் தமிழகத்தில் எந்த ஒரு பெண்ணின் திருமணமும் பணத்திற்காக நின்றுவிடக்கூடாது, அவர்களுக்கு அண்ணனாக நான் இருக்கிறேன்" என சொன்ன முதல்வர் விஜய், அதை செயலிலும் காட்டிவிட்டார்.
கல்வி, மருத்துவத்திற்கு அடுத்து, குடும்ப நலத்தில் அவர் காட்டும் அக்கறைக்கு தமிழகமே பாராட்டி வருகிறது. இந்த திட்டம் தான் வரும் 2027 பொங்கல் பரிசாக இருக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அண்ணன் சீரில் 8 கிராம் தங்க நாணயம் (22 காரட் தூய தங்கம்) - 60,000 எண்ணிக்கை, ஒரு பட்டுப்புடவை (Silk Saree). இன்றைய தங்க விலைப்படி பார்த்தால் 8 கிராம் தங்கத்தின் மதிப்பே ரூ.70,000-த்தை தாண்டும், பட்டுப்புடவை ரூ.15,000-20,000 மதிப்புள்ளது. ஆக ஒரு குடும்பத்துக்கு கிட்டத்தட்ட ரூ.90,000 மதிப்புள்ள சீரை அரசே செய்கிறது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக 60,000 தங்க நாணயங்கள் மற்றும் 60,000 பட்டுப்புடவைகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.
தங்க நாணயத்தின் ஒருபுறம் அரசு சின்னமும், மறுபுறம் முதலமைச்சர் விஜய் படமும் இடம்பெற உள்ளன.வழங்கப்படவுள்ள பட்டுப்புடவைகள் 100% தூய மல்பெரி பட்டு (Mulberry Silk) ஆக இருக்க வேண்டும் என்றும், அவற்றுடன் சில்க் மார்க் (Silk Mark) மற்றும் ஹேண்ட்லூம் மார்க் (Handloom Mark) இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
