சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ்நாட்டின் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குச் சொல்லப்படும் முக்கியக் காரணங்களில் ஒன்று - திமுக சீனியர்கள் இன்னும் இளைஞர்களுக்கு வழிவிடாததே ஆகும்.
இந்த மாதிரியான குறைகளைக் கண்டுபிடிக்கக் குழு ஒன்றை அமைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, இன்று (ஆகஸ்ட் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
2. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்
3. சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
4. பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.
5. சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
6. நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.
7. சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
8. வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும் போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது
.9. கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட வேண்டும். தலைமைக்கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானத்தின்படி, மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் மாவட்ட செயலாளர் பதவியை இழக்கும் 13 பேர்:
க. சுந்தர்- காஞ்சிபுரம் தெற்கு- வயது 72
ஆர். காந்தி- இராணிப்பேட்டை- வயது 80
எ. வ. வேலு- திருவண்ணாமலை தெற்கு- வயது 75
செஞ்சி மஸ்தான்-விழுப்புரம் வடக்கு- வயது 71
எஸ்.ஆர். சிவலிங்கம்- சேலம் கிழக்கு- வயது 75
சு. முத்துசாமி- ஈரோடு தெற்கு- வயது 77
சாக்கோட்டை க. அன்பழகன்- தஞ்சாவூர் வடக்குவயது 72
ரகுபதி- புதுக்கோட்டை தெற்கு- வயது 76
கோ. தளபதி- மதுரை மாநகர்- வயது 70
நா. இராமகிருஷ்ணன்- தேனி தெற்கு- வயது 77
கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்- வயது 77
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்-தூத்துக்குடி தெற்கு- வயது 74
இரா. ஆவுடையப்பன்- திருநெல்வேலி மேற்கு- வயது-81
திமுகவில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவந்த “மாநகர செயலாளர்” (City Secretary) என்ற பதவியை முழுமையாக ரத்து செய்து, கட்சி அமைப்பில் புதிய சீர்திருத்தத்தைக் கொண்டு வரத் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவெடுத்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
