Breaking News

அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் அறிவிப்பு Tamil Nadu Makkal Munnetra Kazhagam leader John Pandian announces withdrawal from AIADMK-BJP alliance

அட்மின் மீடியா
0

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியேறுவதாக அந்த கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஜி.கே.வாசனின் தமாகா வெளியேறியது. Tamil Nadu Makkal Munnetra Kazhagam leader John Pandian announces withdrawal from AIADMK-BJP alliance



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தது. இதில் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, தமாகா புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திதது. குறிப்பாக கூட்டணியில் இடம்பெற்ற பெரிய கட்சிகளான பாஜக, பாமக ,அமமுக கட்சிகள் தலா ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தன. 

இந்நிலையில் அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

தமமுக கட்சிக்கு என்டிஏ கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ராஜபாளையம் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட நிலையில், தோல்வியை தழுவியது.இப்படியான நிலையில் தற்போது என்டிஏ கூட்டணியில் தமமுக வெளியேறியுள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். மக்கள் தீர்ப்பே... மகேசன் தீர்ப்பு. நல்லாட்சி தர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தவெகவுக்கு போகவில்லை. அதிமுகவில் இருந்து தவெக செல்வோர் அனைவரும் கொள்ளைக்காரர்கள், அவர்களை சேர்த்தால் அழிவுதான் ஏற்படும். ஒரு சொம்பு பாலில் துளி விஷம் கலந்தாலும் அவ்வளவுதான் என்பதை முதல்வர் உணர வேண்டும். கடந்த தேர்தலில் ஒரு சீட்டை கொடுத்துவிட்டு, நாங்கள் அவர்களிடம் கெஞ்சுவது போல இருந்தது தவறுதான். எங்களுக்கு சீட்டு கொடுக்காத பலனை அவர்கள் அனுபவித்து விட்டார்கள் எனத் தெரிகிறது. 

உள்ளாட்சி தேர்தலில் தவெகவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து பொதுக்குழு கூட்டி முடிவெடுக்குப்படும். அடுத்து யாருடன் கூட்டணி என்பதை பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிப்போம். கூட்டணியில் நிரந்தரம் என்று கிடையாது” என்றார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback