Breaking News

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக பொதுக்குழுவில் தீர்மானம்

அட்மின் மீடியா
0
திமுக கூட்டணிக்கு இனி திரும்ப மாட்டோம் - வைகோ திட்டவட்டம் மதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய வைகோ, திமுக கூட்டணிக்கு இனி திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என்றும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்போம் என்றும் தெரிவித்தார்.



தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட சில நிர்வாகிகள் கூறுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே திமுக மற்றும் மதிமுக இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக தெரிவித்தனர். சட்டமன்றத் தேர்தலின்போது அந்த அதிருப்தி மேலும் அதிகரித்ததாகவும் அவர்கள் கூறினர்.

தேர்தலில் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதோடு, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை கட்சியின் பல நிர்வாகிகள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. 

மேலும், வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படாததும் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், முதலமைச்சர் விஜய், வைகோவை நேரில் சந்தித்து பேசியதும், துரை வைகோவுடனும் மரியாதை நிமித்தமாக தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிப்படி கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட்டதை சில மதிமுக நிர்வாகிகள் வரவேற்றதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தையில் என்னைச் சந்திக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார். நேரம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என ஸ்டாலின் கூறினார். பாஜகவை எதிர்க்கத்தான் திமுகவை ஆதரித்தோம். ஆனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க திமுக முயற்சி செய்தது.

ஐயூஎம்எல், விசிக ஆதரவு கொடுத்து அமைச்சர்கள் ஆனார்கள். நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் ஏன் எங்களை கேவலமாக பேசுனீர்கள்? நாங்கள் என்ன செய்தோம்? இரு நாட்களுக்கு முன் நடந்த திருமணத்தில் ஸ்டாலினைச் சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சீமானிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு அவர் என் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

கூட்டணியில் இருந்தபோது திமுக மீது விமர்சனம் வைத்தது இல்லை. திமுக ஆட்சியை பாராட்டி இருக்கிறேன். சிறு விமர்சனம் கூட வைத்தது இல்லை. இனி திமுகவுடன் தோழமை நீடிப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு மதிமுக வந்துள்ளது என் நேர்மை, நாணயம் எனக்கு தெரியும். பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடித்து வருகிறேன்.”இவ்வாறு அவர் பேசினார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback