புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 2.28 கோடி ரேஷன் அட்டைத்தாரர்கள் உள்ளனர். அரசு திட்டங்களைச் செயல்படுத்தவும், குடும்பங்களின் விவரங்களை சரிபார்க்கவும் ரேஷன் கார்டு முக்கியமானதாகும். இந்த ரேஷன் அட்டை வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கவும், திருத்தங்களைச் செய்யவும் அரசு அனுமதிக்கிறது.
இருப்பினும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளும், புதிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் செயல்முறைகளும் கடந்த மே 15-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன், “புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மிக விரைவில் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.
அதன்படி கடந்த ஜனவரி முதல் 2,25,000 புதிய ரேஷன் அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக 46,000 அட்டைகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
