Breaking News

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகை கட்டாயம் - வெளியான அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகை கட்டாயம் - வெளியான அறிவிப்பு

ரேஷன் அட்டைகளில் ஜூன் 25-க்குள் கைரேகை பதிவு கட்டாயம்அனைத்து குடும்ப ரேஷன் அட்டைதாரர்களும் ஜூன் 25ம் தேதிக்குள் தங்கள் குடும்பபத்தில் உள்ள உறுப்பினர்களின் கைரேகைகளைப் புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது

.மற்ற மாவட்டங்களில் வசிப்பவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் இந்தப் பதிவை நிறைவு செய்யலாம்.மேலும், ரேஷன் அட்டைகளிலிருந்து இறந்தவர்களின் பெயர்களை ஜூன் 25-ஆம் தேதிக்குள் நீக்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைரேகை பதிவு செய்யப்படவில்லை என்றால் உங்கள் குடும்ப அட்டை நீக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது இந்த கைரேகையின் நோக்கம் இறந்த நபர்களை கணக்கெடுப்பு செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. 

இதன்படி ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் ஆதார் அட்டையை இணைக்கும் போது, இரண்டிலும் பதிவாகி உள்ள கைரேகை ஒன்றாக பொருந்த வேண்டும். அப்போது தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும்

இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில் “ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயமாக கைரேகை பதிவு செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்து விட்டு, கைரேகை பதிவு செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இறந்திருந்தால் அவர்கள் குறித்த அறிக்கையை உடனடியாக கூட்டுறவுத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback