திருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயு கசிந்து 7 பேர் இறந்தது எப்படி? ஆலையில் நடந்தது என்ன? வெளியான FIR
திருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயு கசிந்து 7 பேர் இறந்தது எப்படி? ஆலையில் நடந்தது என்ன? வெளியான FIR How did 7 people die due to ammonia gas leak in Tiruvallur factory? What happened in the factory? FIR released
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகை பேரி என்ற கிராமத்தில் செயின்ட் பீட்டர்ஸ் அன்ட் பால் என்ற கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒடிசா, அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 250 தொழிலாளர்கள் வழக்கம்போல பணியாற்றி வந்தனர். காலை 10.30 மணியளவில் குளிரூட்டியாகப் பயன்படுத்தப்படும் அமோனியா தொட்டியில் இருந்து வாயு கசிய தொடங்கிய நிலையில், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். சிலருக்கு மூக்கு, வாய் பகுதிகளில் ரத்தம் கசிந்தது
இதன் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. சிலருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டதால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாயுகசிவு விவகாரத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அமோனியா கியாஸ் கசிவு விபத்தில் உயிரிழந்த 7 பேரும் ஒரிசாவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட 77 பேரில் 68 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
இந்த நிலையில், இறால் பண்ணையில் அம்மோனியா வாயு கசிந்து ஏழு பேர் உயிரிழந்த விவகாரத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியானது. கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமோனியா கேஸ் செல்லும் பைக் வால்வில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி முடிந்து ஓய்வில் இருந்தவர்கள் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆலையிலேயே தங்கி இருந்த 50-க்கும் மேற்பட்ட ஆண் பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அமோனியா வாயுகசிவு தொடர்பாக ஆலையின் உரிமையாளர் மோகன், மேலாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்நிலையில், ஆலை வளாகத்தில் வழக்கமான அளவைவிட அதிக அளவில் தூசு இருந்ததாக மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வழக்கமாக பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 என்ற அளவில் காற்றின் நுண்துகள் கண்டறியப்படும் நிலையில் அமோனியாவின் அளவு 200 முதல் 300 பிஎம் வரை இருந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. உடலில் உள்ள ஈரப்பதத்துடன் அமோனியா இணைந்து, அமோனியம் ஹைட்ராக்சைடாக மாறியதாகவும், இந்த கடுமையான காரத்தன்மையால் மூச்சுக்குழாய், தொண்டை மற்றும் நுரையீரலின் மேற்பரப்பில் கடுமையான ரசாயன காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் மோகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags: தமிழக செய்திகள்
