Breaking News

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசி சென்ற கொடூரம் - நடந்தது என்ன காவல்துறை விளக்கம்

அட்மின் மீடியா
0

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை நடந்தது என்ன காவல்துறை விளக்கம்

A case of sexual assault of a minor girl was reported under SIPCOT Police Station limits in Gummidipoondi subdivision, Thiruvallur district. Police registered a case and arrested the accused after investigation. Authorities confirmed that only one person was involved, and both the accused and victim are from Bihar. Further investigation is ongoing, and the public is urged not to spread misinformation

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேடினர். அப்போது சிலர் முட்புதரில் குழந்தை காயங்களுடன் உடல்நலம் குன்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அருகில் வசித்து வந்த இளைஞர் பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.சிறுமியிடம் வடமாநில இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட குழந்தையை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.இதனிடையே, கொடூர செயலில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 

கும்மிடிப்பூண்டியில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனவும் இந்த சம்பவத்தில் ஒருவர்தான் குற்றவாளி எனவும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கும்மிடிப்பூண்டி அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை ஏதும் நடைபெறவில்லை என்றும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு என்பவரை உடனடியாக கைது செய்துள்ளதாகவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்றும், தவறான தகவல்களை பொதுமக்கள் பரப்ப வேண்டாம், அதை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில், பிடிபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு என்ற அந்த இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்த ஒரு ஊடகத்திலும் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback