Breaking News

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் ரூ.100 கோடி மோசடி புகாரில் கைது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை

அட்மின் மீடியா
0

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் ரூ.100 கோடி மோசடி புகாரில் கைது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை

.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தர லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் புகார்களும் அளிக்கப்பட்டன. புகார்களில் முறைகேடு, பணமோசடி சம்பவங்கள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட ரு.100 கோடி மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

பள்ளி அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க நிறுவனர் தலைவர் பிடி அரசகுமார், பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில் கைது செய்துள்ளனர்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், தி.மு.க நிர்வாகியுமான பி.டி. அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் அளித்த அடுக்கடுக்கான புகார்களின் அடிப்படையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது 

கைதான இவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவடைந்த பிறகு, நீதிமன்ற காவலில் இவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

அண்மையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காக பல்வேறு துறைகளில் இருந்து நிதி வசூலிக்கப்பட்டதாக பேசியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback