வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப்பை பாதுகாப்பாக வைக்கவேண்டும் என பரவும் செய்தி உண்மை என்ன? Voter Slip 2026 fake news
அட்மின் மீடியா
0
வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப்பை பாதுகாப்பாக வைக்கவேண்டும் என பரவும் செய்தி உண்மை என்ன
பரவும் செய்தி:-
இஸ்லாமிய சொந்தங்களே... அனைவருக்கும் *அஸ்ஸலாமு அலைக்கும்* நாம் அனைவரும் நமக்கு தரும் வாக்காளர் பூத் ஸ்லிப் (பேப்பர்) நமது பகுதி *பி.எல்.ஓ* *B.L.O.* அதிகாரியிடம் பெற்று பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தேர்தல் முடிந்த பின்னும் இந்த ஸ்லிப்பினை (பேப்பர்) கிழித்து குப்பையில் போடாமல் பத்திரமாக நமது ஒரிஜினல் தஸ்தாவேஜூடன் வைத்து பாதுகாக்குமாறும் (ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆவணங்கள் மூலமாகவும் பென்ட்ரைவ் ஈமெயில் போன்றவை மூலமாகவும்) அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அதே போல் தேர்தலில் அனைவரும் காலையிலேயே முழுமையாக தனது வாக்கினை செலுத்த வேண்டும் என்று அன்புடன்.... அக்கறையுடன்.. கேட்டுக்கொள்கிறேன்
கூடுதல் தகவல்: இந்த *பூத்ஸ்லிப்* குடியுரிமை ஆவணமாகவும் பார்க்கப்படலாம்... *இன்னும் 10 அல்லது 20, வருடங்கள்* *கழித்து* *எஸ்.ஐ.ஆர்* *SIR* மீண்டும் செய்யப்பட்டால் இந்த பூத் ஸ்லிப் மிகுந்த உதவியாக இருக்கும். ஆதலால் இது முக்கிய ஆவணம் (டாக்குமெண்ட்) என்பதை மறக்க வேண்டாம்.
உண்மை என்ன:-
தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தகவல் சீட்டு ஆகும். வாக்குச்சாவடியில் நமது விவரங்களை எளிதாகக் கண்டறிய இது உதவுகிறது.
இதிலுள்ள வரிசை எண்ணை வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் காண்பிப்பதன் மூலம், நமது விவரங்களை அவர்கள் நொடிப்பொழுதில் சரிபார்த்து, வாக்குப்பதிவு அறைக்குள் அனுமதிக்க ஏதுவாக இருக்கும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) என்பது அடையாளச் சான்று அல்ல. எனவே, வாக்களிக்கச் செல்லும்போது இதனுடன் சேர்த்து வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.
வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப் இதற்க்கு இன்று ஒரு நாள் மட்டும் செல்லுபடியாகும் தற்காலிக ஆவணம் ஆகும். பூத் ஸ்லிப்பை, பலரும் அடையாள சான்று என்று நினைத்துக்கொள்கின்றனர்.
1. முதல் பக்கத்தில் கீழ் இப்படி உள்ளது
இந்த சீட்டு வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
2. பின்புறம் குறிப்பு எண் 6-ஐ பார்க்கவும்
இந்த சீட்டு வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
3. 12 மாற்று ஆவணங்கள் இருந்தால் மட்டுமே செல்லுபடி ஆகும்
இந்த சிலிப் வாக்காளர் + வாக்கு அலுவலர்கள் எளிதில் வாக்களர் பட்டியலில் தங்களின் தொகுதி+ வாக்கு சாவடி + வரிசை எண் கண்டுபிடித்து வாக்களிக்க மட்டுமே உபயோகும் ஒரு ஆவணம் ஆகும்
அடுத்த தேர்தலில் இதே சிலிப்பை கொண்டு சென்று வாக்களிக்க முடியாது, ஏன் என்றால் அன்று தங்களின் வரிசை எண் மாறி இருக்கும் ( உ.தா வா.எண் 65 இல் இருந்து 95 ஆக மாறிவிடும் அல்லது 12 ஆக குறைந்து விடும் ?
Tags: FACT CHECK தமிழக செய்திகள் மறுப்பு செய்தி
