Breaking News

கோடைகால முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் முழு பட்டியல்

அட்மின் மீடியா
0

கோடை விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, ஏப்ரல் 15 முதல் ஜூலை 15, 2026 வரை நாடு முழுவதும் 18,262 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

தமிழகத்தில் சென்னை-திருநெல்வேலி, சென்னை-மதுரை மற்றும் போத்தனூர்-சென்னை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் வார இறுதி நாட்களில் இயக்கப்படுகின்றன



சென்னை - நெல்லை (முன்பதிவில்லா): வார இறுதி நாட்களில், சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை திருநெல்வேலி சென்றடையும். 

இந்த ரயிலுக்கான பயணச்சீட்டுகளை ரயில் நிலையங்களில் உள்ள சாதாரண முன்பதிவு இல்லாத கவுண்டர்களில் பயணிகள் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை - தாம்பரம்: நெல்லையிலிருந்து பிற்பகல் 2:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 

இந்த ரயிலுக்கான பயணச்சீட்டுகளை ரயில் நிலையங்களில் உள்ள சாதாரண முன்பதிவு இல்லாத கவுண்டர்களில் பயணிகள் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போத்தனூர் - சென்னை (தேர்தல் சிறப்பு): ஏப். 26 அன்று, காலை 7:40 மணிக்கு போத்தனுாரில் புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு சென்னை வருகிறது. 

சென்னை - கோவை: ஏப். 26 அன்று, மாலை 6:35 மணிக்கு சென்னையில் புறப்பட்டு, மறுநாள் காலை 4:00 மணிக்கு போத்தனுார் சென்றடையும்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback