ஹஜ் பயணிகள் மெஹந்தி இட வேண்டாம் என பரவும் செய்தி உண்மை என்ன Mehndi Ban ❌ for Hajj? Truth About Viral News
அட்மின் மீடியா
0
ஹஜ் பயணிகள் மெஹந்தி இட வேண்டாம் என பரவும் செய்தி உண்மை என்ன Mehndi Ban ❌ for Hajj? Truth About Viral News
பரவும் செய்தி:-
மருதாணி விரல்களில் உள்ள மெல்லிய கோடுகளை மறைத்துவிடுகிறது. இதனால், ஸ்கேனர் கைரேகையைப் படிப்பது கடினமாகி, சரிபார்ப்பு செயல்முறை பாதிக்கப்படலாம். மேலும், சவூதி அரேபியாவில் சிம் கார்டு வாங்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் கைரேகை சரிபார்ப்பு கட்டாயமாகும். விரல்களில் மருதாணி இருப்பது சிம் செயல்படுத்துவதையும் தடுக்கக்கூடும், இதனால் யாத்ரீகர்களுக்குத் தகவல் தொடர்புச் சிக்கல்கள் ஏற்படும். பரேலி ஹஜ் சேவா சமிதி, அனைத்து யாத்ரீகர்களும் தங்கள் பயணத்தைச் சுமுகமாகவும், தொந்தரவின்றியும் மேற்கொள்ளவும், பயோமெட்ரிக் செயல்முறையில் ஏற்படும் எந்த இடையூறுகளையும் தவிர்க்கவும் இந்த ஆலோசனையைப் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.என ஓர் செய்தி சமூக வலைதளங்களில் பரவுகின்றது.
உண்மை என்ன:-
சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், இது தொடர்பாக எந்வொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மருதாணி போடுவது தவறு இல்லை மேலும் , நவீன தொழில்நுட்ப சோதனைகள் காரணமாக விமான நிலைய இமிigration-ல் சிரமம் ஏற்படாமல் இருக்க, கைகளில் அதிக மருதாணி வைப்பதைத் தவிர்ப்பது நல்லது
Tags: FACT CHECK மறுப்பு செய்தி
