புதுச்சேரியில் மும்மொழி கொள்கை கட்டாயமாகிறது- சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்
புதுச்சேரியில் தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் கீழ் மூன்று மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டு அமல்படுத்தப்படுகிறது. இந்தி கட்டாயம் இல்லை எனவும், விருப்பமுள்ளவர்கள் பிராந்திய மொழியைத் தேர்வு செய்யலாம் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. 2023 முதல் சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தை அமல்படுத்தியதையடுத்து, இந்த மாற்றம் பள்ளிகளில் கொண்டுவரப்பட்டுள்ளது
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகள், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து சிபிஎஸ்இ-க்கு (CBSE) மாறியதை அடுத்து, மும்மொழிக் கொள்கை அமலாகிறது. மொழிகள்: மாணவர்கள் தமிழ்/பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது பிற பிராந்திய மொழிகளைப் படிக்க வேண்டும்.
புதுச்சேரியில் 2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
புதிய மும்மொழிக் கொள்கை ஒரே ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிப்பதால், இந்த கல்வியாண்டில் பல சிபிஎஸ்இ பள்ளிகள் பிரெஞ்சு மொழியை நீக்கியுள்ளன.
Tags: தமிழக செய்திகள் புதுச்சேரி செய்திகள்
