Breaking News

News Headlines இன்றைய முக்கிய செய்திகள்

அட்மின் மீடியா
0

News Headlines இன்றைய முக்கிய செய்திகள்



23ஆம் தேதியன்று மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் NDAவின் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் தொடங்கி வைப்பார் என நயினார் நாகேந்திரன் தகவல் - கூட்டணியில் அ.ம.மு.க, தே.மு.தி.க இணையுமா? என்பது குறித்து ஜன.23ல் தெரிய வரும்

டெல்லியில் இன்று 2-வது முறையாக சி.பி.ஐ. முன் ஆஜராகிறார் விஜய் - கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்றே டெல்லி சென்றார்.

உள்நாட்டு மோதலில் ஈடுபட்டு வரும் எஸ்.டி.எஃப். அமைப்புடன் போர் நிறுத்தம் அறிவித்தது சிரியா அரசு - யூப்ரடிஸ் நதிக்கு மேற்கு பகுதியில் இருந்து படைகள் வாபஸ் பெற கிளர்ச்சி அமைப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல்.

காஸாவில் நீடித்து நிலைத்த அமைதியை ஏற்படுத்துவதற்கான குழுவில் இணைய பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு - உலகளாவிய போருக்குத் தீர்வு காண துணிச்சலான புதிய அணுகுமுறையை தொடங்க இருப்பதாகக் கூறி கடிதம்...

தமிழக காங்.மாவட்ட தலைவர்கள் மாற்றம்!தமிழக காங்.கமிட்டியின் மாவட்ட தலைவர்களை மாற்றம் செய்து புதிய பட்டியலை வெளியிட்டது அகில இந்திய காங்கிரஸ்.

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள். மதுராந்தகம், சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நிறைவு. 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், 13 லட்சம் பேர் மட்டுமே பெயரை சேர்க்க விண்ணப்பம்.

இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து. 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது இந்தியா.

கார்னிவல் விழா நிறைவை முன்னிட்டு காரைக்காலில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் உத்தரவு

ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பை பெறமுடியாமல் இருந்தவர்களுக்கு நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது. ரூ.3,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது

பிற இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருது; 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சாத்தூர் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்தில் பயங்கர தீ விபத்து; ஓட்டுநரின் துரித செயல்பாட்டால் உயிர் தப்பிய 76 பயணிகள்

கலை இலக்கிய விருதில் அரசியல் தலையீடு ஆபத்தானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்; மத்திய அரசின் கலாச்சாரத் துறை தலையீட்டால் சாகித்ய அகாடமி விருது நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு

வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டும் பாஜக; தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் குழு அமைப்பு

மம்தாவின் கொடூர ஆட்சிக்கு எதிராக மேற்குவங்க மக்கள் மாற்றத்தை தேடுவதாக பிரதமர் மோடி பேச்சு; திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வழியனுப்பு விழா நடத்த மக்கள் தயாராகிவிட்டதாகவும் விமர்சனம்

ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவிருக்கும் கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை கைவிட சீமான் வலியுறுத்தல்; 16 கிராம மீனவர் வாழ்வாதாரம் பலிகொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு


Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback