Breaking News

NEWS HEADLINES TODAY இன்றைய முக்கிய செய்திகள்

அட்மின் மீடியா
0

NEWS HEADLINES TODAY இன்றைய முக்கிய செய்திகள்



தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி| வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக் கூடும் என முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுள்ளது வானிலை ஆய்வு மையம்

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், இன்று காலை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்!படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாகப் பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இன்று வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் புதிய ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு.

'உங்க கனவ சொல்லுங்க' என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. தமிழ்நாடு முழுவதும் 50,000 தன்னார்வலர்கள் மூலமாக 1.91 கோடி |குடும்பங்களை சந்தித்து அவர்களது கனவுகளை அறிவதற்கான படிவம்| அளித்து, பிரத்யேக எண் கொண்ட 'கனவு அட்டை' வழங்கத் திட்டம்

பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. 21,535 சிறப்பு பேருந்துகள் உட்பட 34,087 பேருந்துகள் இயக்க நடவடிக்கை.

போரூர் - வடபழனி இடையே இன்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்.. காலை 8 மணி முதல் 11 மணிக்குள் நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்

வெனிசுலா எண்ணெய் வளம் மீதான பேராசையை மதுரோவை சிறைபிடிக்க காரணம்.. அமெரிக்கா மீது புதிய அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் குற்றச்சாட்டு

திருவாரூர், நாகையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்; மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் | என கணிப்பு; அம்பாந்தோட்டை மற்றும் கல்முனைக்கு இடையே கரையை கடப்பதால் இலங்கைக்கு எச்சரிக்கை

அதிமுகவுடன் அன்புமணி மேற்கொண்ட கூட்டணியை நாடகம் என விமர்சித்த பாமக நிறுவனர் ராமதாஸ்; பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதி இல்லை எனவும் சாடல்

வரும் 18ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆலோசனை; அதிகாரப் பகிர்வு தொடர்பாக கருத்துகள் எழுந்துள்ள நிலையில் முக்கியத்துவம் பெறும் கூட்டம்

கடலூர் பாசார் கிராமத்தில் இன்று நடக்கிறது தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு; சட்டமன்றத் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்பு| வெளியாக வாய்ப்பு

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ள டிடிவி தினகரன்; கூட்டணி தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டம் என தகவல்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback