NEWS HEADLINES TODAY இன்றைய தலைப்புச் செய்திகள்
அட்மின் மீடியா
0
NEWS HEADLINES TODAY இன்றைய தலைப்புச் செய்திகள்
- பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு விநியோகத்தை நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்துக்காக ஜன. 9, 10, 11-ஆம் தேதிகளில் ரேஷன் கடைகள் முழுமையாக செயல்படும்
- உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல். ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரின் ஆளுநர் உரை குறித்தும் ஆலோசனை
- அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ-க்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி. பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே பொறுப்பு என கட்டுப்பாடுகள் விதித்து அரசாணை.
- திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க உள்ளார்.
- கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நிறுத்திவைப்பு. வழக்கறிஞர்களின் கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து அறிவிப்பு.
- விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணை. ரிலீஸ் தேதியை நிர்ணயத்தாலும் சட்டப்படிதான் செல்ல முடியும் என தணிக்கை வாரிய தரப்பு வழக்கறிஞர் வாதம்.
- எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு பிறகு உத்தரப்பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம். தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் 12.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
- அதிக வரிகள் செலுத்துவதால் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் இல்லை. அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிகளை சுட்டிக்காட்டி ட்ரம்ப் கருத்து.
- நேபாளத்தில் டிக்டாக்கில் மத பிரச்னையை கிளப்பும் வகையில் வீடியோ வெளியானதால் வெடித்த வன்முறை. இந்திய-நேபாள எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்.
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு - தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவு செல்லும் எனக் கூறி மனு முடித்துவைப்பு.
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
- வாக்காளர் பட்டியலைத் திருத்த தங்களுக்கு முழு அதிகாரமும் தகுதியும் உள்ளது; வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்.
- சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் 49வது புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். நாளை முதல் ஜன.21 வரை நடைபெறும் சென்னை புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணம் இன்றி இலவச அனுமதி
- வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் கணிப்பு; தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை
- ஒருவரின் கோரிக்கைக்காக, இல்லாத வழக்கத்தை நடைமுறைப்படுத்த முடியாது; திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்
- எடப்பாடி பழனிசாமி மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருக்கும்போது மற்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தலாமா? - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம்
- 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு CBI சம்மன்; டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
Tags: இந்திய செய்திகள்
