பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது ? முழு விவரம் YouTuber 'Savukku' Shankar was arrested again
அட்மின் மீடியா
0
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் மாலதி கைது YouTuber 'Savukku' Shankar was arrested again
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது யூடியூப் பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
படத் தயாரிப்பாளரை மிரட்டியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் அவரைக் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆதம்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்குப் போலீசார் சென்றனர். அவரை வீட்டிலேயே வைத்து அவர்கள் கைது செய்தனர்.
இந்தக் கைது குறித்து சவுக்கு சங்கர் தரப்பில் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர ஆணையர் அருண் குறித்த தகவலை அவர் வெளியிட்டார். ஆணையர் அருண் பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டார். அதனால்தான் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சவுக்கு சங்கர் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில்
அதில், சென்னை மாநகர காவல்துறை என்னை கைது செய்ய வந்திருக்கிறது. நான் இன்னும் கதவை திறக்கவில்லை. வழக்கறிஞர் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். போலீசார் உடனே திறங்கள் என்று சொல்லி உள்ளார்கள்.
அக்டோபர் இறுதியில் சம்மன் ஒன்று ஆதம்பாக்கம் ஸ்டேசனில் இருந்து வந்தது. என்ன வழக்கு என்று பார்த்தால் ரெட்டன் ஃபாலோ ஒரு படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன் என்பவர் 30.06.2025 அன்று என் அலுவலகத்திற்கு வந்து என்ன பத்தி அந்த வீடியோவில் தப்பா பேசிட்டீங்க. அந்த வீடியோவை நீக்குங்கள் சொன்னதாகவும், நான் மற்றும் மாலதி, அலுவலகத்தில் இருந்தவர்கள் சேர்ந்து அவரை அடித்து இன்னும் 10 லட்சம் கொடுத்தால் தான் வீடியோவை நீக்குவேன் என்று சொன்னதாகவும், அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்து விட்டதாகவும் எப்ஐஆரில் தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இது முழுக்க பொய் வழக்கு. இது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் புருஷோத்தமன் யாரும் வரவில்லை. இதை என்னுடை விளக்கமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நவம்பர் 1ம் தேதி பதில் கடிதம் அனுப்பி விட்டேன்.
இதுவரை எந்தவிதமான காவல்துறை தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. நேற்று இரவு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் பினாமி நிறுவனத்தின் மூலம் ஏகப்பட்ட முறைகேடுகளை செய்திருக்கிறார்கள் என்ற விவரங்களை வெளியிட்டதும் அதிகாலையில் இதே வழக்கில் கைது செய்ய போலீசார் வந்துள்ளனர்.
கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க வழக்கறிஞர் வந்த பிறகு தான் கதவு திறக்கப்படும் என்று கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
