ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி ஆப் கட்டாயம்.. மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு! What is Sanchar Saathi?
ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி ஆப் கட்டாயம்.. மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், தொலைத்தொடர்பு அமைச்சகம் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ உத்தரவிட்டுள்ளது. இந்தச் செயலி பயனர்களால் நீக்க முடியாதபடி இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளது.
சஞ்சார் சாத்தி ஆப் என்றால் என்ன
சஞ்சார் சாத்தி என்பது இந்திய தொலைத்தொடர்புத் துறையால் தொடங்கப்பட்ட ஒரு இலவச செயலியாகும் . இந்த செயலி உங்கள் தொலைபேசி எண்ணையும் மொபைல் சாதனத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் கருவிகளை வழங்குகிறது. இந்த செயலி உங்களைச் செய்ய அனுமதிக்கும் சில விஷயங்கள் இங்கே. உங்கள் பெயரில் எத்தனை மொபைல் இணைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க இது உங்களை அனுமதிக்கிறது
நம்மில் பொதுவாக அனைவரும் இரண்டிற்கும் மேற்பட்ட மொபைல் எண்களை வைத்துள்ளோம். சில நேரம் வேறு யாராவது நம் பெயரில் மொபைல் எண் வைத்துள்ளார்களா என சந்தேகம் எழும்.
உங்கள் ஐடியில் தெரியாத எண் இயங்கினால், எப்படி புகார் செய்து அதை நிறுத்துவது. உண்மையில் உங்கள் ஐடியில் எத்தனை சிம்கள் செயலில் உள்ளன. இதைக் மேலும் அந்த ஆப் மூலம், மொபைல் இணைப்புகளை கண்டறிவதோடு, திருடப்பட்ட/இழந்த மொபைல்களைக் மீட்டெடுக்கவும் முடியும்.
தற்போது அதற்கான வசதியை இந்திய தொலைத்தொடர்பு துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் tafcop.dgtelecom.gov.in என்ற அரசு இணையதளத்திற்கு செல்லவும்.
உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்ட் உள்ளது என அறிய https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ இணையதளத்திற்கு செல்லவும்
அதில் உங்கள் பத்து இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.
பிறகு மொபைல் எண்ணிற்கு ஒரு OTP ஒன்று வரும். அதை பதிவு செய்து சரிபார்க்கவும்.
இப்போது உங்கள் ஐடியில் இருந்து இயங்கும் அனைத்து எண்களின் விவரங்களும் வரும். பட்டியலில் உங்களுக்குத் தெரியாத எண் இருந்தால், அதைப் புகாரளிக்கலாம்.
இது குறித்து புகாரளிக்க ‘எனது எண் அல்ல’ என்ற விருப்பத்தை தேர்வு செய்து அதை புகார் செய்யலாம்
பிறகு அந்த எண்ணை அரசு தொலைத்தொடர்பு துறை பிளாக் செய்து விடும்.
ஆனால், இனி நம்முடைய போன் தொலைந்துவிட்டால் அதனை கண்டுபிடிக்க மத்திய அரசு சஞ்சார் சாத்தி Sanchar Sathi என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
International Mobile Equipment Identity சர்வதேச மொபைல் கருவி அடையாள எண் ஆகும்.இது உங்களின் மொபைல் போனின் ஐஎம்இஐ நம்பர் ஆகும்
இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் இந்தியா முழுவதும் தங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களின் 15 இலக்க ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு அந்த போன் எங்கு இருக்கிறது என எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.
மேலும் சிறப்பம்சமாக அந்த மொபைல் போனை யாரும் பயன்படுத்த முடியாதவாறு முடக்கவும் முடியும்.
ஆப் இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-
https://play.google.com/store/apps/details?id=com.dot.app.sancharsaathi
https://sancharsaathi.gov.in/
Tags: தமிழக செய்திகள்

