Breaking News

விக்சித் பாரத் சிஷா ஆதிக்ஷன் என்ற பெயரில் புதிய உயர்கல்வி ஆணையம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.Viksit Bharat Shiksha Adhikshan

அட்மின் மீடியா
0

விக்சித் பாரத் சிஷா ஆதிக்ஷன் என்ற பெயரில் புதிய உயர்கல்வி ஆணையம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் கலைத்துவிட்டு, 'விக்சித் பாரத் சிஷா ஆதிக்ஷன்' என்ற ஒரே ஆணையத்திற்கு கீழ் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

இதன் மூலம் புதிய ஆணையத்தின் கீழ் UGC, AICTE, NCTE உள்ளிட்ட ஆணையங்களின் செயல்பாடுகள் செல்கிறது!

தேசிய கல்வி கொள்கை 2020 பரிந்துரைத்தப்படி, இந்தியாவின் உயர்கல்வியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய உயர்கல்வி ஆணையத்திற்கான மசோதாவிற்கு மத்திய அரசு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விக்சித் பாரத் சிக்‌ஷா அதிக்‌ஷன் (Viksit Bharat Shiksha Adhikshan) என்பது, இந்திய உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவையால் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு மசோதா ஆகும்

இது, யு.ஜி.சி (UGC), ஏ.ஐ.சி.டி.இ (AICTE) போன்ற பல ஒழுங்குமுறை அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கத்தைக் கொண்டது, 

இதன் இலக்கு 2047க்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதாகும்.

ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை: உயர்கல்விக்கான பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) போன்ற பல அமைப்புகளை ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டுவர இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இந்திய உயர்கல்வி ஆணையம் (HECI) மசோதா' என அழைக்கப்பட்ட இந்த மசோதா, இப்போது 'விக்சித் பாரத் சிக்‌ஷா அதிக்‌ஷன் மசோதா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback