அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு us dollar to indian rupee
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு us dollar to indian rupee
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய சந்தை மதிப்பின்படி, ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 90.18 ஆக உள்ளது.
ரூபாய் சரிவு காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, கச்சா எண்ணெய், மின்னணு மற்றும் தொழில்துறை பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் உயர்கின்றன.
வெளிநாட்டுக் கடன்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு கடன் சுமை மேலும் கூடுகிறது. இதனால், சாமானிய மக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதேநேரத்தில், இந்த சரிவால் ஏற்றுமதியாளர்கள் சிறிது பலன் பெறுகிறார்கள்.
பாதிப்பு என்ன:-
இறக்குமதி (Import) பொருட்கள் விலையேறும்
உதாரணம்:
முன்பு $1 = ₹70 என்றால் $100 = ₹7000
தப்போது $1 = ₹90 என்றால் $100 = ₹9000➡ 2000 ரூபாய் கூடுதல்
நம்நாட்டிற்க்கு 85% கச்சா எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து தான் வாங்கப்படுகின்றது. டாலர் விலை கூடியால் எண்ணெய் வாங்கும் செலவு உயரும், பெட்ரோல், டீசல், LPG விலை அதிகரிக்கும், பெட்ரோல் விலை அதிகமானால் அத்யாவசிய தேவை பொருட்கள் விலை உயரும்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்