தமிழக அரசியலில் முக்கிய திருப்பம் - தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் TTV மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைவார்கள் -செங்கோட்டையன்
தமிழக அரசியலில் முக்கிய திருப்பம் - தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் இணையும் - TTV மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைவார்கள் -செங்கோட்டையன்
தவெக கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் பொங்கலுக்கு முன்னதாகவே இணைவார்கள் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், "அதிமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலபேர் பொங்கலுக்கு முன்னரே தவெகவில் இணைய இருக்கின்றனர். பொங்கலுக்கு முன்பாகவே முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், ஆகியோர் தவெக கூட்டணியில் இணைவார்கள்" என்று கூறியுள்ளார்
அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அங்கம் வகித்தனர்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணி குறித்து நிலைப்பாடு எடுக்க வேண்டிய சூழலில் உள்ளனர். இருவரும் தவெக உடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்