Breaking News

Today HeadLines இன்றைய முக்கிய செய்திகள்

அட்மின் மீடியா
0

Today HeadLines இன்றைய முக்கிய செய்திகள்


சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் ஸ்மிருதி மந்தனா.மித்தாலி ராஜ், இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ், நியூசி., வீராங்கனை சூசி பேட்ஸ்-க்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய 4வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மித்தாலி 

கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய அரசு அனுமதி. 10ம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சமர்ப்பித்ததை அடுத்து 11ம் கட்ட அகழாய்விற்கு அனுமதி வழங்கியது. ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படலாம் என தகவல்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து எர்னாகுளம் புறப்பட்ட ரயிலில் தீ விபத்து. ஆந்திராவின் எலமஞ்சிலி ரயில் நிலையத்தில் இரு AC பெட்டிகளில் தீ பிடித்ததில் ஒருவர் உயிரிழிப்பு என தகவல்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பம். உறுதிமொழி படிவம் கொடுப்பதில் குளறுபடி நீடிப்பதால் சேர்ப்பதில் சிக்கல்.

பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு. திமுக மேற்கு மண்டல மகளிர் அணி சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு.

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி. நாளை நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்று, இலங்கையை ஒயிட் வாஷ் செய்ய முனைப்பு.

மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் உள்ளிட்ட மருந்துகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்; பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

சென்னையில் டிசம்பர் 31ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்; கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு

சிகரெட் விலை 18 ரூபாயில் இருந்து 72 ரூபாயாக உயர வாய்ப்பு; புதிய சட்டத் திருத்தத்தால் மற்ற புகையிலைப் பொருட்களின் விலையும் உயரும் என தகவல்

திமுக கூட்டணியில் காங்கிரஸும் விசிகவும் இருக்குமா என்பது கேள்விக்குறி; ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம் 13 லட்சம் பேர் பயன்பெற்றதாக முதல்வர் பெருமிதம்; நலமடைந்தவர்களின் குடும்பத்தினர் கூறும் நன்றிகளோடு திட்டம் தொடர்வதாகவும் நெகிழ்ச்சி

தமிழ்நாட்டின் கடன் நிலைமை அபாயகரமானதாக உள்ளது; தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக கனிமொழி எம்.பி. கூறியிருந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம்

ஊரக வேலைத் திட்டம் குறித்து திமுக பொய் பிரசாரம் செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஐந்தே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடனை இருமடங்காக உயர்த்தியுள்ளது திமுக அரசு; பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவை சுட்டிக்காட்டி பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம்

செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணனை, கட்சியிலிருந்து நீக்குவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். காலம் முதல் அ.தி.மு.க.வில் இருந்த பல்பாக்கி கிருஷ்ணன், 1989-இல், ஜெயலலிதா அணி சார்பில் ஓமலூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback