இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் Today Headlines tamil
இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் Today Headlines tamil
பிரதமர் மோடி வருகிற 15 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஜோர்டான் நாட்டில் சுற்றுப்பயணம் - ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - புதிதாக சுமார் 17 லட்சம் பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் வகையில் நடவடிக்கை.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல; தீபத் தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றக் மதுரைக் கிளையில் அரசு தரப்பு வாதம்
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் .திருப்புவனம் DSP சண்முகசுந்தரம் உட்பட மூவரின் பெயர்கள் சேர்ப்பு
ஈரோட்டில் வரும் 18 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார்; பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் பரப்புரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு; காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் இந்நிகழ்ச்சி நடைபெறும்- தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்
அமைச்சர் கே.என்.நேரு துறையில் 1900 கோடி ரூபாய் அளவிற்கு 2 ஊழல்கள் நடந்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு - அமலாக்கத்துறை 2 முறை கடிதம் எழுதியும் தமிழக காவல்துறை வழக்கு பதியாதது ஏன் என கேள்வி.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதனுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் நீதிபதிகள் 56 பேர் கூட்டறிக்கை - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பதவி நீக்க தீர்மானத்துக்கு இண்டியா கூட்டணி நோட்டீஸ் கொடுத்தது நீதிபதிகளை அச்சுறுத்தும் முயற்சி என கண்டனம்...
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்தார். கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
திரையரங்கில் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகே ஓடிடியில் படங்களை வெளியிட வேண்டும்.. ஓ.டி.டி தளங்களுக்கு "செக்" வைக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்.
தேர்தலையொட்டி தமிழகத்தில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கத் தொடங்கியது வருமான வரித்துறை... 30 வருமான வரித்துறை ஆய்வாளர்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதாக மாநில வருமான வரித்துறை புலனாய்வு இயக்குனர் பிரதாப் சிங் யாதவ் தகவல்...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; அந்த அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும்; கரூர் சம்பவம் தொடர்பான ரிட் மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் குழப்பம் உள்ளது; உயர்நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறுகள் உள்ளது என்றே கருதுகிறோம் உச்சநீதிமன்றம் கருத்து
வரும் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி .ரூ.1000 வெறும் தொடக்கம் தான் என்றும் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பேச்சு
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்த கர்நாடகா அரசு.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (100 நாள் வேலை) பெயரை 'பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா' என மாற்ற ஒன்றிய அரசு திட்டம்!
அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல்.
சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன்; எப்படி என்பது பிறகு வரும் சூழ்நிலைகளில் புரியும். எல்லா கட்சிகளுடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வந்துகொண்டே இருக்கிறது; (எந்தக் கட்சி என்று நானே சொல்வேன் - காளியம்மாள்
2011ம் ஆண்டுக்குப் பின் என்ன ஆனார் என்றே தெரியாத நிலையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்; இலவசம் என கொச்சைப்படுத்தியவர்கள் கூட தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தியுள்ளதாகவும் பேச்சு
மலையில் தீபம் ஏற்ற தனி நபர்களுக்கு உரிமையே இல்லை; கோயில் நிர்வாகத்தின் உரிமைக்கு உட்பட்டதுநீதிமன்றம் தனி நபர்களுக்கு உரிமையை வழங்கும் போது, ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இவைகள் கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகளை கடினமாக்கும்- கோயில் நிர்வாகம் தரப்பில் வாதம் திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை தொடர்பான வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
தமிழ்நாட்டில் நடைபெறுவது பெண்களுக்கான ஆட்சி என உதயநிதி பேச்சு; அனைத்து நலத் திட்டங்களும் பெண்களை மனதில் வைத்தே தீட்டப்படுகிறது என்றும் கருத்து
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு 11 ஆயிரத்து 718 கோடி ரூபாய் ஒதுக்கீடு; பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு; வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடத்த அனுமதி; நகரின் நற்பெயருக்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேச்சு
மீண்டும் மல்யுத்த களத்திற்கு திரும்பும் வினேஷ் போகத்; அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்
