Breaking News

SIR படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும் 13 ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரி

அட்மின் மீடியா
0

SIR படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும் 13 ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரி 

SIR படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்பு வழங்கப்படும் என்றும், விசாரணையின்போது 13 ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதுசென்னை,தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின் போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19 ஆம் தேதி வெளியானது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.01.2026 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும். 

அறிவிப்புக் காலகட்டமானது டிசம்பர் 19 முதல் 2026 பிப்ரவரி 10 வரை ஆகும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் வழிகாட்டுதல்களின்படி, விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) / உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO) மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும்.

இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 13 ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக் கூடிய ஆவணத்தை வாக்காளர்கள் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்வர். 

மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இந்நடைமுறை குறித்து விளக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலானது பிப்ரவரி 17 ( 17.02.2026 )அன்று வெளியிடப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback