இன்றைய தலைப்பு செய்திகள் News Headlines Today
அட்மின் மீடியா
0
இன்றைய தலைப்பு செய்திகள் News Headlines Today
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேரோட்ட திருவிழாவினை முன்னிட்டு 02.01.2026 (வெள்ளிக் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் அதிகம் பேர் பங்கேற்ற நிகழ்வு 'Malaysian Book of Records'-សំ இடம்பிடித்து சாதனை படைத்தது நடிகர் விஜயின் ‘ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா!
புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து அரசிதழில் வெளியீடு திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகளில் தலா 48 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள். மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவையாறு, போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை மற்றும் சங்ககிரி ஆகிய 10 புதிய நகராட்சிகளில் தலா 22 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியா நாட்டில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படும் 'சோமாலிலாந்து' என்ற பகுதியை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்தது இஸ்ரேல் அரசு! 1991 முதல் தனக்கென தனி அரசு, ராணுவம் உள்ளிட்டவைகளை கொண்டு இயங்கும் சோமாலிலாந்தை அங்கீகரிக்கும் முதல் நாடானது இஸ்ரேல்.
U19 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு, ஆயுஷ் மாத்ரே கேப்டனாகவும், விஹான் மல்ஹோத்ரா துணை கேப்டனாக செயல்படுவார்கள். வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், கனிஷ்க் செளகான், கிலன் படேல், முகமது ஏனான், ஹெனில் படேல், கிஷன் குமார் சிங், உதவ் மோகன்,அம்ரிஷ், தீபேஷ் தேவேந்திரன் அணியில் உள்ளனர்.
முதல் நாளில் இருந்து என்கூடவே இருந்தது என் ரசிகர்கள்தான். ஒருநாள்.. இரண்டுநாள் இல்லைங்க.. கிட்டத்தட்ட 33 வருஷத்துக்கு மேல என்கூடவே நின்னு இருக்காங்க.. அதனால் அடுத்த 30... 33 வருஷத்துக்கு அவங்ககூட நான் நிற்க முடிவு பண்ணியிருக்கேன்" எனக்கு ஒண்ணுனா ரசிகர்கள் தியேட்டரில் நிற்குறாங்க.. நாளை அவங்களுக்கு ஒண்ணுனா அவங்க வீட்டுல போய் நிற்க முடிவு பண்ணியிருக்கேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த என் ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக்கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா ‘நன்றி’ன்னு சொல்லிட்டு போறவன் கிடையாது. நன்றிக்கடன் தீர்த்துவிட்டுதான் போவேன்" ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேச்சு
புதுச்சேரி, பாண்டி மெரினா கடற்கரையில் உள்ள பாறை பகுதியில் அமர்ந்து இருந்த பெண் திடீரென கால் தடுக்கி விழுந்ததில் பாறைக்கு நடுவே சிக்கிக்கொண்ட நிலையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பெண்னை மீட்பதில் சீரமம் ஏற்பட்டுள்ளதால் தற்போது கிரேன் மூலம் பாறையை அகற்றி பெண்ணை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் தவெக கொடியை காட்டிய ரசிகர் மலேசிய காவல்துறையினரால் கைது!
Maglev ரயிலை, வெறும் 2 விநாடிகளில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தில் இயக்கி சீனா சாதனை.
ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு அமைச்சர் நமச்சிவாயம் உடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு .ஜனவரி இறுதிக்குள் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
கலசப்பாக்கம், வந்தவாசி, செய்யாறில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு.
தமிழ்நாட்டில் இன்று 2வது நாளாக வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம். எஸ்ஐஆர் படிவம் சமர்பித்தும் பெயர்கள் விடுபட்டோர் புதிய படிவம் கொடுத்து முறையிடலாம்.
வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் வேண்டும். சும்மா வருவோர் போவோரை எல்லாம் எதிர்க்க முடியாது. வலுவானவரை எதிர்க்கும் போதுதான் ஜெயிக்கிற அளவு வலு நமக்கு வரும். விஜய் தனியா வருவாரா அணியா வருவாரா என்று அடிக்கடி கேட்கிறார்கள். நாம் எப்போது தனியாக வந்தோம். 33 ஆண்டுகளாக அணியாகத்தானே வந்திருக்கிறோம். இப்போதுகூட விளக்கம் போதவில்லை என்று சொல்வார்கள். GDF ஆனால் சஸ்பெண்ஸில்தான் கிக் இருக்கும்” -ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேச்சு
பாஜக ஆதரவாளர்களே ஒன்றிய அரசை திட்டித் தீர்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். தி.மு.க-வுக்கு வாக்களிக்காதவர்கள் கூட தமிழ்நாடு அரசை பாராட்டுவதாகவும் பெருமிதம்.
தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணி, மக்களை எப்படி காப்பாற்றுவார்? என ராமதாஸ் கேள்வி. சேலத்தில் நாளை நடைபெறும் பொதுக்குழுவே தமது கடைசி யுத்தமாக இருக்கலாம் என்றும் உருக்கம்.
இடைவிடாது புதிய உச்சம் தொடும் ஆபரணத் தங்கம் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் ஏற்றம். ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை.
ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 5 முதல் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு. 100 நாள் வேலை திட்டத்தைக் கைவிட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி காட்டம்.
தைவானில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள். பீதியில் உயரமான கட்டிடங்களில் இருந்து வீதிக்கு வந்து தஞ்சமடைந்த மக்கள்.
போர் நிறுத்த முயற்சிகளுக்கு இடையே உக்ரைனை குறிவைத்து ரஷ்யா உக்கிர தாக்குதல். டிரோன் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு.
கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் காளியம்மன் கோவில் தெருவில் ஆசாரி வின்சென்ட் ராஜ் என்பவர் வீடு மின் கசிவு காரணமாக எரிந்து இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் .
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேர் ஒரு படகுடன் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிப்பு. கட்சி தலைமை அலுவலகம் பகுதியில் பாதுகாப்பு விஜயகாந்தின் 2வது நினைவு தினத்தை ஒட்டி குருபூஜையில் கலந்து கொள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்களுக்கு அழைப்பு சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் குருபூஜை, இசை கச்சேரி மற்றும் அன்னதானத்திற்கு ஏற்பாடு
உ.பி.: பாக்பட் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்தில் இளைஞர்கள் டவுசர் அணியவும், ஸ்மார்ட்போன் பயன்படுத்தவும் தடை விதித்து முடிவு . இளைஞர்கள் டவுசர் அணிந்து நடமாடுவது, ஸ்மார்போன் பயன்படுத்துவது ஆகியவை பெண்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக விளக்கம்
டெல்லியில் நடைபெற்ற தலைமை செயலாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோடி மத்திய, மாநில அரசுகள் இடையிலான உறவை வலுப்படுத்த ஆலோசனை
ஜனவரி 1 ஆம் தேதி முதல் வைகை, பொதிகை, பாண்டியன், உள்ளிட்ட 57 ரயில்கள் மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் - தைப்பூசத்தை ஒட்டி நடவடிக்கை என தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் குளிர் அதிகரிக்குமென வானிலை மையம் தகவல் குறைந்த பட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடுமென கணிப்பு
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையே இன்று 4வது டி20 கிரிக்கெட் போட்டி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்திய வீராங்கனைகளின் வெற்றி தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சாலையில் கிடந்த தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களை பொன்னாடை போர்த்தி பாராட்டிய போலீசார்.டியூஷன் சென்டர் செல்லும் வழியில் கண்டெடுத்த நகையை ஆசிரியர்களுடன் வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்
கேரளாவின் பலா நகராட்சியில் சுயேச்சையாக களமிறங்கி வென்ற 21 வயதே ஆன தியா பினு, காங்கிரஸ் கூட்டணி ஆதரவுடன் நகரத் தலைவராகத் தேர்வு
இதன் மூலம், இவர் கேரளாவின் முதல் Gen Z நகராட்சித் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம். பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்று இடத்தில் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான அலை வீசுவதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சனம். ஊழல் அமைச்சர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி
சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது. திருவிக நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா.
அசாம் மாநிலத்தில் 10 லட்சத்து 56 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் - எஸ்.ஐ.ஆர் |பணிக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
மண்டல பூஜை நிறைவு பெற்றதை அடுத்து மூடப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோவில் நடை தொடர்ந்து 41 நாட்களாக திறந்திருந்த கோவிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
இன்று திட்டமிடப்பட்டிருந்த 13 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு மூடுபனி உள்ளிட்ட வானிலை காரணங்களால் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக தகவல்
எண்ணிக்கையில் சிறுபான்மை சமூகங்களை புறக்கணிக்கும் திராவிடக் கட்சிகள். குயவர்கள், வண்ணார்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதில்லை என சீமான் குற்றச்சாட்டு
வரலாற்றிலேயே இல்லாத அளவாக புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை. ஒரே நாளில் கிலோவுக்கு 31 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
Tags: தமிழக செய்திகள்
