இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் NEWS HEADLINES TODAY TAMIL
நைஜீரியாவில் ISIS தீவிரவாதக் குழு மீது சக்திவாய்ந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளதாக அதிபர் டிரம்பு அறிவிப்பு. கிறிஸ்துவர்களை குறிவைத்து தொடர் தாக்குதல்கள் |நடத்தி வந்த தீவிரவாதிகளுக்கு முடிவு கட்டியுள்ளதாகக் குறிப்பிட்டு கிறிஸ்துமஸ் தின வாழ்த்தை கூறியுள்ளார்
டெல்லியில் 2 நாட்கள் மட்டுமே தங்கினாலும், அதீத காற்று மாசு காரணமாக, எனக்கு நோய்த் தொற்றுகள் வந்துவிடுகின்றன. ஒவ்வொரு முறை டெல்லிக்கு செல்லும் போதும், 'நிச்சயம் அங்கு போக வேண்டுமா?' என்று யோசிப்பேன். காற்று மாசு அவ்வளவு மோசமாக உள்ளது” -ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வேதனை
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில், இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு. ரூ.2,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
நாடு முழுவதும் விரைவு ரயில்களில் கட்டண உயர்வு இன்று முதல் அமல். அதிகபட்சமாக ரூ. 85 வரை கட்டண உயர்வு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம்.. ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிப்பு
வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்.. அசாமில் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது
மிகப்பெரிய பனிச்சறுக்கு விளையாட்டு சுற்றுலா சந்தையை உருவாக்கியுள்ள சீனா.. பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்...
விஜயின் 'ஜனநாயகன்' படத்தின் 3வது பாடல் இன்று வெளியாகிறது!
3வது டி20 போட்டி: இந்தியா - இலங்கை மகளிர் அணிகள் இன்று மோதல்!
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லி, சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சீர்குலைக்க முயற்சி; கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை சேதப்படுத்தி, கிறிஸ்தவர்கள் மீது வலதுசாரி அமைப்பினர் தாக்குதல்
தமிழகத்தில் SIR படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்கள்; நேரில் வந்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ்
பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு 74 விழுக்காடு அதிகரிப்பு; கலவர கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது, அனைவரது பொறுப்பு என முதல்வர் ஸ்டாலின் கருத்து
இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்போர் உரிமம் பெற வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு; பாதுகாப்பாகவும், தரமான பொருட்களைக் கொண்டும் இடியாப்பம் தயாரிக்க அறிவுறுத்தல்
Tags: தமிழக செய்திகள்
