News Headlines Toaday
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் பலி .பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்ததால் 2 கார்கள் மீது மோதியது. இதில் இன்னோவா காரில் வந்த 6 பேர், மற்றொரு காரில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
திருவள்ளூர் ஆரம்பாக்கத்தில் கடந்த ஜுலையில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசாமைச் சேர்ந்த பிஸ்வகர்மாவுக்கு (35) இரட்டை ஆயுள் தண்டனை -போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு. சிசிடிவி காட்சியை ஆதாரமாகக் கொண்டு தீவிர புலன் விசாரணை |நடத்தி ஜூலை 25ம் தேதி ஆந்திராவில் பிஸ்வகர்மா கைதான நிலையில், 5 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.1.45 லட்சம் அபராதமும் விதிப்பு
புதுச்சேரியின் வளர்ச்சிக்காக சொந்த பணம் ரூ.100 கோடி ஒதுக்குவேன் என LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வாக்குறுதி; மேலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தனி வாரியம் அமைப்போம் .புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ரூ.50,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், எனவும் LJK சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது
மேம்படுத்தப்பட்ட PULSAR 150 பைக்கை அறிமுகம் செய்தது BAJAJ நிறுவனம்! 3 VARIANT-களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக்குகளின் ஆரம்ப விலை ரூ.1.09 லட்சத்தில் (EX-SHOWROOM) தொடங்குகிறது.
20 ஆண்டுகளுக்கு பின் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்ரேவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக MNS தலைவர் ராஜ் தாக்கரே அறிவிப்பு. 2005ல் சிவசேனாவில் நிலவிய உட்கட்சி பூசலால் அக்கட்சியில் இருந்து |விலகி தனிக்கட்சி தொடங்கியிருந்த ராஜ் தாக்ரே நீண்ட இடைவெளிக்கு பிறகு உத்தவ் தாக்ரேவுடன் ஒன்றாக இணைந்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர். படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ். நேரில் ஆஜராகி ஆவணங்களை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம்அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 தேதிகளில் முகாம் நடைபெறும் என அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலக் கொண்டாட்டம். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ். முதற்கட்டமாக ஆயிரம் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.
7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி. உதயச்சந்திரன் கூடுதல் தலைமைச் செயலாளரானார்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக ஆலோசனைக் கூட்டம்; விஜயின் தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் விருப்பம் தெரிவித்ததாக தகவல்
சிறுபான்மையின மக்களின் உண்மைத் தோழனாக திமுக அரசு என்றும் இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
தமிழகத்தில் 27ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்; ஓரிரு இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் எனவும் கணிப்பு
கர்நாடக துணை முதலமைச்சராக தொடர்வதில் மகிழ்ச்சியடைவதாக டி.கே.சிவகுமார் அறிவிப்பு முதலமைச்சர் இருக்கைக்காக சித்தராமையாவுடன் அதிகார மோதல் என கூறப்படும் நிலையில் கருத்து
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து - லாரி மோதி, பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 17 பேர் உயிரிழப்பு
விஜய் ஹசாரே தொடரில் ஆந்திர அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியில் விளையாடிய கோலி சதமடித்தார் - சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் ரோகித் ஷர்மாவும் சதம்
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம்; மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 289 கோடி ரூபாய் ஒதுக்கியது தமிழ்நாடு அரசு
டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்; காற்று சுத்திகரிப்பானுக்கான ஜிஎஸ்டியை குறைக்க டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
அமெரிக்காவின் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு உக்ரைன் சம்மதம். ரஷ்யாதான் முடிவு எடுக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி அறிவிப்பு.
அரசு முறைப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டர்லின் இன்று கள்ளக்குறிச்சி செல்கிறார்!!
வடதமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு
2026 தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் ஓபிஎஸ் நல்ல முடிவை எடுப்பார். பொங்கலுக்கு பிறகு அதிமுகவில் இருந்து பல தலைவர்கள் தவெகவை நோக்கி வருவார்கள் செங்கோட்டையன் பேட்டி
ஹஜ் புனித பயணத்திற்கான முன்பதிவுகளை 2026 ஜன.15ம் தேதிக்குள் கட்டாயம் முடிக்குமாறு தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கம் அறிவுறுத்தல்!வரலாற்றில் முதல்முறையாக, ஹஜ் காலத்திற்கு 5 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அரசு அங்கீகரித்த தனியார் ஹஜ் நிறுவனங்கள் அல்லது ஹஜ் கமிட்டி மூலம் மட்டுமே பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தல்.
புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை வரும் 26ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். சென்னை மாநகராட்சி இணையதளத்தில் கட்டணமில்லா முன்பதிவு அவசியம். காலை 8.30 முதல் மாலை 6.30 வரை, 1.30 மணி நேர இடைவேளையில் 60 பேருக்கு அனுமதி
Tags: தமிழக செய்திகள்
