நில அளவை செய்வதற்கு லைசன்ஸ் பெற விண்ணப்பிக்கலாம் Licenatite Course in Land Surveying
நில அளவை செய்வதற்கு லைசன்ஸ் பெற விண்ணப்பிக்கலாம் Licenatite Course in Land Surveying
நிலஅளவை செய்வதற்கான உரிமம்" பெறுவதற்குரிய 3 மாத A (Licenatite Course in Land Surveying) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களையும் நில அளவை (ம) நிலவரித்திட்ட துறையின் https://tnlandsurvey.tn.gov.in இனையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2025
நில அளவை செய்வதற்கு ஆன்லைனில் உரிமம் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை அளவீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
நில அளவை செய்ய அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நில அளவை செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி:
1. இணையதளத்திற்குச் செல்லவும்:http://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
2. விண்ணப்பிக்கவும்:நில அளவை செய்ய வேண்டிய நிலத்தின் விவரங்களைப் பதிவு செய்து, விண்ணப்பிக்கவும்.
3. கட்டணம் செலுத்தவும்:விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும். கட்டணத்தைச் செலுத்தவும் இணையவழி வசதி உள்ளது.
தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், B.E. (Civil Engineering, B.E., (Geo (Earth Remote Sensing and Geo Engineering Informatics), M.Sc., (Geography), M.Sc., Information Technology) Diploma in Civil ஆகிய கல்வித் தகுதிகளில் ஒன்றினை பெற்றவர்களிடமிருந்தும், National Trade Certificate in the Trade of Surveyor awarded by the National Council for Vocational Training (For Surveyor) A Certificate in Army Trade Surveyor (Field) issued by the Madras Engineering Group சான்றிதழ் பெற்றவர்களிடமிருந்தும், "நிலஅளவை செய்வதற்கான உரிமம்" பெறுவதற்குரிய 3 மாத பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த முழு விவரங்களையும், "https://tnlandsurvey.tn.gov.in" விண்ணப்பப் படிவத்தையும் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2025.
விண்ணப்பதாரருக்கான அறிவுரைகள்
1. விண்ணப்பப் படிவம் கருப்பு அல்லது நீல நிற மையினால் தெளிவான எழுத்துகளில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
2. சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான விண்ணப்பதாரரின் புகைப்படம் இடத்தில் ஒட்டப்பட்டு, விண்ணப்பத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரரால் கையொப்பமிடப்பட வேண்டும்.
3. விண்ணப்பதாரரால் சுய சான்றொப்பமிடப்பட்ட பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல்களின் நகல்கள், பட்டய மற்றும் பட்டப்படிப்பில் பெறப்பட்ட தொகுப்பு மதிப்பெண் பட்டியலின் நகல் அல்லது ஒவ்வொரு பருவத்திலும் (செமஸ்டர்) வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்களின் நகல்கள், இதர கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகல்கள்,
National Trade Certificate in the Trade of Surveyor awarded by the National Council for Vocational Training (For Surveyor) and A Certificate in Army Trade Surveyor (Field) issued by the Madras Engineering Group குடும்ப அட்டையின் நகல், ஆதார் அல்லது முகவரி மற்றும் ஆளறி சான்றாக மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தின் நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். ,
4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அதன் இணைப்புகளுடன் பதிவஞ்சலில் "முதல்வர் / இணை இயக்குநர் (பயிற்சி), தமிழ்நாடு நிலஅளவைப் பயிற்சி நிலையம், ஒரத்தநாடு 614 625, தஞ்சாவூர் மாவட்டம்" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பம் அடங்கிய தபால் உறையின் மேல் "நிலஅளவை செய்வதற்கான உரிமம் பெறுவதற்குரிய பயிற்சிக்கான விண்ணப்பம்" 6T 60T குறிப்பிடப்பட வேண்டும்.
5. விண்ணப்ப பரசீலனைக் கட்டணம் ரூ.500/- கீழ்க்கண்ட இணையதள வாயிலாகச் செலுத்தி, அதற்கான ஒப்புதல் இரசீது (e-receipt) விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்ப பரசீலினைக் கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் பரிசீலினைக்கு உட்படுத்தப்படமாட்டது.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://tnlandsurvey.tn.gov.in/
Tags: தமிழக செய்திகள்
