Breaking News

கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை Kerala Localbody Election results

அட்மின் மீடியா
0

கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை Kerala Localbody Election results

கேரளாவில் நடைப்பெற்ற local body electionனில் ஆளும் CPIM கூட்டணியே விட காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.



கேரள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.கேரளத்தில் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று(டிச. 13) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை

கம்யூனிஸ்ட் கட்சி(எல்டிஎஃப்) கூட்டணி சற்று பின்னடைவைச் சந்தித்து வருகிறது.  அதேநேரத்தில் காங்கிரஸ் கூட்டணியான யுடிஎஃப் முன்னிலையில் இருந்து வருகிறது

மொத்தமுள்ள 941 ஊராட்சிகளில் 

காங்கிரஸ் கூட்டணி 496 இடங்களிலும்

கம்யூனிஸ்ட் கூட்டணி 344 இடங்களிலும் 

பாஜக கூட்டணி 25 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 

காங்கிரஸ் கூட்டணி  4 இடங்களில் முன்னிலை

கம்யூனிஸ்ட் கூட்டணி 1 இடத்திலும்

பாஜக கூட்டணி  1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

கேரளத்தில் அடுத்தாண்டு(சில மாதங்களில்) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.அதன்படி உள்ளாட்சித் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்திருப்பது ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://trend.kerala.nic.in/

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback