இன்றைய தலைப்புச்செய்திகள் Headlines Today
இன்றைய தலைப்புச்செய்திகள் Headlines Today
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது! வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதி உடைய வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். ஜனவரி 3, 4ம் தேதிகளிலும் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அரசு பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும் தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களில் தொலைதூர சேவைக்கு இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு அரசாணை வெளியிடும் முன், வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் 30 நாட்களுக்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு. ரூ.2.66 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
வட மாநிலங்களில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கண்டனம். இந்தியா அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது என காட்டம்.
அமெரிக்காவில் வீசும் பனிப் புயலால் 1,800 விமானங்கள் ரத்து. 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் தாமதத்தால் பயணிகள் அவதி
ஜனவரி 20ஆம் தேதி ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு. அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை வாசித்து பேரவையின் மாண்பை ஆளுநர் காப்பாற்றுவார் என அப்பாவு நம்பிக்கை
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல், மதியழகன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேருமாறு எங்களிடம் அண்ணாமலை பேசிவருகிறார். மிரட்டி யாரையும் கூட்டணியில் சேர்க்க முடியாது என டி.டி.வி.தினகரன் பேட்டி
கள்ளக்குறிச்சியை தொடர்ந்து தி.மலையில் இன்று கள ஆய்வில் ஈடுபடும் முதல்வர் மு.க.ஸ்டாலின். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் போராட்டம். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல் துறை
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி - மத்திய அரசின் சமீபகால திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து விளக்கியதாக தகவல்...
செய்யாறில் இன்று கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க வரும் முதலமைச்சரை வரவேற்க தி.மு.க.வினர் ஏற்பாடு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைபெறுகிறது மண்டல பூஜை - ஆரன்முளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 450 பவுன் தங்க அங்கியை சார்த்தி சிறப்பு வழிபாடு
நீலகிரி, கொடைக்கானல் மலைபகுதிகளில் அடுத்த இரு நாட்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்பு - தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படுமென வானிலை மையம் தகவல்
சர்வதேச மகளிர் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் தீப்தி சர்மா. 1000 ரன்களும், 151 விக்கெட்டுகளும் எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்
தமிழகத்தில் மதநல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையும் பாஜகவின் கண்களை உறுத்துகிறது. வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் விழாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி. போராட்டம் தொடரும் என பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் அறிவிப்பு
அதிமுகவில் விருப்பமனு சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு. டிசம்பர் 23ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைந்திருந்த நிலையில் 31ஆம் தேதி வரை நீட்டித்து அதிமுக அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி இந்திய மகளிர் அணி அசத்தல். 3வது போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு உதவிய ஷபாலி வர்மா
Tags: தமிழக செய்திகள்
