சென்னையில் நாளை நடைபெற இருந்த தனது |ஆதரவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
தேர்தல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என அறிவித்த நிலையில், அமித்ஷாவின் தமிழ்நாடு வருகையை ஒட்டி கூட்டம் தள்ளிவைப்பு
ஆந்திராவில் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி வகுப்பறையில் பாடங்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
பாமக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல்
டிசம்பர் 20 வரை சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனுவை பெறலாம் என பாமக அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (100) மூச்சுத் திணறல் காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி
பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் சக நண்பர்களுடன் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் ராம்பாக்கத்தை சேர்ந்த நாகராஜ் மகன் நிர்மல் குமார் (13) நீரில் மூழ்கி உயிரிழப்பு, விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் தீயணைப்பு மீட்பு படையினர் மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்,
இந்திய - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 3ஆவது டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது . தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டி. இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி பதிலடி தருமா என எதிர்பார்ப்பு
திருவண்ணாமலையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு. உதயநிதி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராட வருமாறு இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக்கு முதலமைச்சர் அழைப்பு.
முட்டை பண்ணை கொள்முதல் விலை புதிய உச்சம் தொட்டது. நாமக்கல்லில் 5 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 20 காசுகளாக நிர்ணயம்.
சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் முன் சட்டம் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முதல் பேட்ஜ் மாணவர்கள் நெகிழ்ச்சி.
உடுமலையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி. மாடி வழியாக உள்ளே புகுந்து நோட்டமிட்ட முகமூடி நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல்.
பாஜக- தவெக இடையே மறைமுகமாக எந்த உறவும் கிடையாது. த.வெ.க. கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் உறுதி.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் 4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகளை கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி. சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி தொடரும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை.
கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பாதியிலேயே புறப்பட்டுச் சென்றதால், நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர்.அதாவது, மைதானத்தில் 10 நிமிடம் மட்டுமே மெஸ்ஸி இருந்தார். அவரை பார்ப்பதற்கு சரிவர ஏற்பாடு செய்யவில்லை. இதனால் பணம் கொடுத்து வந்தவர்கள் கோபமடைந்து மைதானத்தை களேபரமாக்கினர். கொல்கத்தாவில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் வன்முறை வெடித்தது குறித்து தீவிர விசாரணை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவிப்பு
கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் முழு உருவச்சிலை திறப்பு. 70 அடி உயர தனது சிலையை திறந்து வைத்தார் லயோனல் மெஸ்ஸி
ஹைதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு. மெஸ்ஸியுடன் கால்பந்து விளையாடிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
அரசு நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்தால் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். மகன் நிலமோசடி விவகாரத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவார் பேச்சால் சர்ச்சை.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கும் உக்ரைன் படைகள். நவீன M-270 ராக்கெட் அமைப்பை பயன்படுத்தி சரமாரியாக தாக்குதல்.
உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பை போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி. இன்று மாலை ஹாங்காங் அணியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செயிண்ட் ஜோசப் சட்டக் கல்லூரியில் LLB முதலாமாண்டு மாணவி பாரதி உயிரை மாய்த்துக் கொண்ட சோகம் வேறு வகுப்பறை மாற்றித் தருமாறு முறையிட்டதால் எந்த தேர்வையும், எழுத விடாமல் கல்வி நிர்வாகம் தண்டிப்பால் தற்கொலை என பெண்ணின் வீட்டார் குற்றச்சாட்டு
கூட்டணி பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி. யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள், யார் வேட்பாளர் என ஜனவரி 9ஆம் தேதி தெரியும் என விளக்கம்