Breaking News

சம்பாதிக்கும் பெண்ணுக்கு கணவர் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Financially Independent Wife Cannot Claim Maintenance

அட்மின் மீடியா
0

சம்பாதிக்கும் பெண்ணுக்கு கணவர் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சுயமாக சம்பாதிக்கும் பெண்ணுக்கு விவாகரத்து பெற்ற கணவர் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை' என அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.



அன்கித் சஹா என்பவர் அவரது மனைவியுடன் விவாகரத்து ஆனநிலையில் வருமானத்திற்கு வழியில்லை என்று கூறி மனைவி நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்தார் 

இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நீதிபதி மதன் பால் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், அந்த பெண்  ஒரு முதுகலைப் பட்டதாரி மற்றும் வெப் டிசைனர் என தெரிய வந்தது அதனை அவரும் ஒப்புக்கொண்டார். மேலும், தனியார் நிறுவனத்தில்  பணிபுரிந்து மாதம் ₹34,000 சம்பளமாகப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வேறு எந்தப் பொறுப்புகளும் இல்லாத ஒரு மனைவிக்கு இந்தத் தொகை மிகக் குறைவானது என்று கூற முடியாது. 

அதேசமயம், கணவர் தனது வயது முதிர்ந்த பெற்றோர்களையும் பிற சமூகக் கடமைகளையும் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளார். எனவே அந்தப் பெண் தனது கணவனிடமிருந்து எந்த ஜீவனாம்சத்தையும் பெறுவதற்குத் தகுதியற்றவர் என்று நீதிமன்றம் உறுதி செய்கிறது. 

அவர் வருமானம் ஈட்டும் பெண் என்பதால், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் திறன் கொண்டவர்" என்று உத்தரவிட்டிருக்கிறது.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback