Breaking News

பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமாக உள்ளது, அதிமுகவில் இணையப் போவது இல்லை எதிர்வரும் தேர்தலில் பழனிசாமிக்கு சரியான பாடத்தை புகட்டுவோம் - ஓ.பன்னீர்செல்வம்

அட்மின் மீடியா
0

பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமாக உள்ளது, அதிமுகவில் இணையப் போவது இல்லை எதிர்வரும் தேர்தலில் பழனிசாமிக்கு சரியான பாடத்தை புகட்டுவோம் - ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்று 11 தேர்தல்களில் அதிமுக படுதோல்வியை அடைந்துள்ளது;எதிர்வரும் தேர்தலில் பழனிசாமிக்கு வரும் காலங்களில் நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்"சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை புரசைவாக்கத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக விமர்சித்துப் பேசினர்.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசும் போது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுக, தற்போது தவறான தலைமை வசம் சிக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். அண்ணா தி.மு.க என்ற பூமாலை தற்போது ஒரு குரங்கின் கையில் சிக்கியுள்ளது என எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருக்கும் வரை தாங்கள் மீண்டும் இணையப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.ஓ.பி.எஸ் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் பின்னால் அணிவகுக்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

கூட்டத்தில் உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ் என்ற பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது. மாபெரும் இயக்கமான அதிமுகவை ஈபிஎஸ் படுகுழியில் தள்ளிவிட்டார். இன்று அதிமுக தொண்டர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி வருகின்றனர். அதுக்கு காரணமான ஈபிஎஸ்க்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், எந்த சூழ்நிலையிலும் எடப்பாடியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

தொண்டர்களுக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., உருவாக்கியது அதிமுக. ஆனால், அது இப்போது அவ்வாறு இல்லை. தை பிறந்தால் வழி பிறக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவில் ஒன்றிணைவோம் என்ற வைத்திலிங்கம் கருத்தை வழிமொழிகிறேன்.எடப்பாடி பழனிசாமி உள்ள அணியில் இருப்பதே வெட்கக்கேடு..பொதுச்செயலாளராக பொறுப்பேற்று சந்தித்த 11 தேர்தல்களில் படுதோல்வி அடைந்து அதிமுகவை பாதாளத்திற்குத் தள்ளிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அவரின் பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது. பழனிசாமி வெற்றி பெறுவார் என்பது வெறும் மாயைதான். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்''என்றார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback