புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் காவல்துறை விதித்த நிபந்தனை முழு விவரம்
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் காவல்துறை விதித்த நிபந்தனை முழு விவரம்
புதுச்சேரியில் டிசம்பர் 9 ம் தேதி விஜய்யின் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு புதுச்சேரி காவல் துறையிடம் த.வெ.க அனுமதி கேட்டது. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது த.வெ.க டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டது.
அதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பொதுக்கூட்டத்துக்கு 5,000 பேர் மட்டுமே அனுமதி
- கூட்டத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களுக்கு அனுமதி கிடையாது.
- கியூஆர் முறையில்தான் பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் அனுமதிக்கப்படுவர்.
- கூட்டத்தின்போது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- கூட்டத்துக்கு விஜய் வருகைதரும் சரியான நேரம் காவல்துறையில் தெரிவிக்கப்பட வேண்டும்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள் புதுச்சேரி செய்திகள்