Breaking News

தமிழக வெற்றிக்கழகத்தில் இணைகிறார் பிரபல நடிகர் ஜீவா ரவி முழு விவரம்

அட்மின் மீடியா
0

தவெகவில் இணைகிறார் பிரபல நடிகர் ஜீவா ரவி முழு விவரம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார்.அதன் தொடர்ச்சியாக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளார்

இந்நிலையில் இன்று நடிகர் ஜீவா ரவி விரைவில் தவெக-வில் இணைகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் செங்கோட்டையனை சந்தித்த பிறகு நடிகர் ஜீவா ரவி செய்தியாளர்களிடம் பேசியதாவது, 

தற்போது தான் உயிரோடு இருக்க காரணமே செங்கோட்டையன் தான் அவருக்கு வாழ்த்து சொல்ல வந்தேன்.. நல்ல விஷயத்துல இறங்கி இருக்காங்க அதுவும் எங்க திரையுலகத்தை சேர்ந்த விஜய் சாரோட சேர்ந்து இருக்காங்க. நானும் சேரலாம்.. அடுத்த மாசம் அது என்னனு உங்களுக்கு தெரிய வரும். தலைவரோட(செங்கோட்டையன்) ஆசிர்வாதம் விஜய் சார் நட்பு என்றும் தொடரும் என கூறினார்.விஜய் சார் துணிவு ரொம்ப பிடிக்கும்... அவர் சொன்னா உண்மையா செய்வாரு... நமக்கு நல்ல தலைவர் வேணும் என்றார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback