Breaking News

தெருவில் சைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்பவர்கள் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் கட்டாயம்!

அட்மின் மீடியா
0

தெருவில் சைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்பவர்கள் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் கட்டாயம்!


இடியாப்பம் விற்க உரிமம் வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் இனி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஆண்டுக்கு ஒருமுறை உணவு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் 

உணவுப் பாதுகாப்புத்துறையின் வழிகாட்டுதலின் படி இடியாப்பங்கள் தயாரிக்க வேண்டும் 

இடியாப்பங்கள் தயாரிப்பதற்கான உணவுப் பாதுகாப்பு உரிமத்தை இணையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் 

காய்ச்சல், தொற்றுப்பாதிப்பு உள்ளவர்கள் இடியாப்ப விற்பனையில் ஈடுபட வேண்டாம் 

இடியாப்பம் விற்கும்போது கையுறை, தலையுறை அவசியம். 

உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback