Breaking News

பெங்களூருவில் பரபரப்பு... மனைவியை நடுரோட்டில் சுட்டுக் கொலை செய்த கணவன் …!

அட்மின் மீடியா
0

பெங்களூருவில் பரபரப்பு... மனைவியை நடுரோட்டில் சுட்டுக் கொலை செய்த கணவன் …!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40)–மகேஷ்வரி (39) தம்பதியினர் 2011-ல் திருமணம் செய்து கொண்டு கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்தனர். 

பாலமுருகன் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் சமீபத்தில் வேலையை ராஜினாமா செய்தார். மகேஷ்வரி தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.குடும்பத் தகராறு காரணமாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பாலமுருகனுடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, மகேஷ்வரி குழந்தைகளுடன் ராஜாஜிநகரில் தனியாக வசித்து வந்தார். 

மேலும், கணவரிடம் விவாகரத்து கோரி நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், மகேஷ்வரி தங்கியிருந்த இடத்தை ரகசியமாக கண்டுபிடித்துள்ளார்.

நேற்று மாலை பணிமுடிந்து வீட்டுக்குச் சென்ற மகேஷ்வரியை வழிமறித்த பாலமுருகன், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். படுகாயமடைந்த மகேஷ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்துக்குப் பின் பாலமுருகன் தானாகவே போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback