Breaking News

பள்ளி மாணவிகள் ஊக்கதொகை பெற விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பள்ளி மாணவிகள் 1000 ஊக்கதொகை பெற விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு




கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், கல்வியின் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 2025-26 பட்ஜெட்டின்போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு கிராம்புறங்களில் மாணவிகளின் கல்வி விகிதத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தி வருகிறது. 

இந்தநிலையில் இந்தாண்டிற்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500

6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை 

இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாங்கமயினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கிராமப்புற பள்ளி மாணவியருக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், கல்வியின் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பு முதல் 5 வரை மாணவியருக்கு ரூ. 500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ. 1000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தகுதிகள்:

பெற்றோர்கள் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவியர் பயில்பவராக இருக்க வேண்டும்.

மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு மட்டும்.விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

அணுகவேண்டிய அலுவலர்சம்பந்தப்பட்ட கிராமப்புற அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback