Breaking News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு சுனாமி எச்சரிக்கை

அட்மின் மீடியா
0
சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவானது
பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

ஜப்பான் நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதிக்கு அருகில் இன்று (டிச. 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.6 எனப் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் அலைகள் 10 அடி உயரம் வரை எழ வாய்ப்புள்ளது என்றும், மக்கள் அனைவரும் கடலோரப் பகுதிகளில் இருந்து உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி 53.1 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback