Breaking News

ரயில்களில் எலக்ட்ரிக் கெட்டில் உபயோகிக்க தடை மீறினால் 5 ஆண்டுகள் சிறை

அட்மின் மீடியா
0

ரயில்களில், 'எலக்ட்ரிக் கெட்டில் உபயோகிக்க தடை மீறினால் 5 ஆண்டுகள் சிறை என ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




ரயில்களில் மொபைல் போன், லேப்டாப்களை, 'சார்ஜ்' செய்யும் வகையில், 'சார்ஜிங் பாயின்ட்'கள் உள்ளன. இந்த சார்ஜிங் பாயின்ட்களை தவறாக பயன் படுத்தக் கூடாது. ஆனால் சிலர், 'கெட்டில்' எனும் மின்சாரத்தில் செயல்படும் பாத்திரத்தை பயன்படுத்தி, டீ, காபி போடுவதாக புகார்கள் வந்துள்ளன.

சமீபத்தில், மஹராஷ்டிராவில் பெண் ஒருவர் ஓடும் ரயிலில், 'கெட்டில்' பயன்படுத்தி, நுாடூல்ஸ் செய்து சாப்பிடும் வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அவர் மீது, மத்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

எளிதில் தீ பற்றக்கூடிய பட்டாசுகள், சமையல் எரிவாயு சிலிண்டர், அமிலம், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை, ரயில்களில் எடுத்துச் செல்லக் கூடாது.அப்படி எடுத்து செல்வோர், சக பயணியர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவராக கருதப்படுவார். 

அதேபோல், 'சார்ஜிங் பாயின்ட்'களில், 'கெட்டில்' போன்ற மின் சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback