அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ரூ.50,000, 10 லட்சம் வட்டியில்லா கடன், வருடத்திற்க்கு 6 சிலிண்டர் இலவசம், இலவச லேப்டாப், அரசு பள்ளியில் படித்தால் ஆண்டு தோறும் 20 ஆயிரம் லட்சிய ஜனநாயக கட்சி தேர்தல் வாக்குறுதிகள்
அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ரூ.50,000, 10 லட்சம் வட்டியில்லா கடன், வருடத்திற்க்கு 6 சிலிண்டர் இலவசம், இலவச லேப்டாப், அரசு பள்ளியில் படித்தால் ஆண்டு தோறும் 20 ஆயிரம் லட்சிய ஜனநாயக கட்சி தேர்தல் வாக்குறுதிகள்
புதுச்சேரியில் "லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின். ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகள் சபையின் உலகளாவிய மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கட்சியின் பெயரையும் அறிவித்தார் ஜோஸ் சார்லஸ் மார்டின்
இந்நிலையில் மகளிருக்கான வாக்குறுதிகளை LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவித்தார். புதுவையின் வளர்ச்சிக்காக சொந்த பணம் ரூபாய் 100 கோடி ஒதுக்குவேன் எனக்கூறியுள்ள LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரடியா வாக்குறுதியளித்து அதிர வைத்துள்ளார்.
லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெறும் மகளிருக்கான JCM-ன் வாக்குறுதிகள் அறிமுக விழாவில் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு; அரியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சட்டமன்ற | உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் 3000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான லட்சிய ஜனநாயக கட்சியின் மகளிர் சார்ந்த முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
அதில், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தனி வாரியம் அமைப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ரூ.50,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணமகள்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவியும், 10 கிராம் தங்கமும் வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு 6 LPG சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். புதுச்சேரியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.35,000 நிதி உதவியும், ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய `JCM-கிட்'-ம் வழங்கப்படும் கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருணமாகாத பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். என்றும் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி ஆட்சி அமைந்தால்.
அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ரூ.50,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணமகள்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவியும் 10 கிராம் தங்கமும் வழங்கப்படும்
இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு 6 LPG சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.35,000 நிதி உதவியும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய ‘JCM-கிட்' வழங்கப்படும்
கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருமணம் ஆகாத பெண்களுக்கு, ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்
குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை தரப்படும்
பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம் மற்றும் பயிற்சி பெறும் வகையில் அதற்கான செலவுகளை, அரசே ஏற்கும்
புதுச்சேரி அரசு இயக்கும் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்
கல்வி நிலையங்கள் மற்றும் பொதுவிடங்களில் இலவச சானிட்டரி நாப்கின் PINK ATM வசதி ஏற்படுத்தப்படும்
கண்ணகி சூரிய ஆற்றல் திட்டம் மூலம், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்கள் தலைமைத் தாங்கும் குடும்பங்களுக்கு இலவச சூரிய மின் வசதி செய்துதரப்படும்
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இருக்கைகள் சட்டப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்படும்
பெண்கள் மற்றும் குடும்பங்களைப் பாதிக்கும் பிரச்னைகளை கையாள, அரசின் கீழ் பெண்கள் ஆலோசனை பேரவைகள் அமைக்கப்படும்
பெண் தலைவர்களாக உருவாக விரும்புவோருக்கு, அரசின் சிறப்பு அகாடமி மூலம் ஆட்சி நிர்வாகத்தில் டிப்ளமோ பயிற்சி வழங்கப்படும்
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பெண்கள் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்
இயக்குநர், செயலர் நிலை எனப்படும் அரசு உயர் நிர்வாகப் பதவிகளில் பெண்களுக்கு குறைந்தபட்சம் 33% இட ஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தப்படும்
*பெண் பட்டதாரிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நேரடியாகப் பணியாற்றும் வகையில், ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய பயிற்சி தரப்படும்
அனைத்து கூட்டுறவு சங்கங்களின் இயக்குநர் குழுக்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்
கைம்பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா அவசரக் கடன் வழங்கப்படும்
அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் தாய்மார்களுக்கு, ஆண்டுதோறும் ரூ.20,000 வழங்கப்படும்
தாய் மற்றும் குழந்தை நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.35,000 நிதி உதவி மற்றும் JCM ஊட்டச்சத்து கிட் வழங்கப்படும்
மனச்சோர்வு, குடும்ப அழுத்தங்களுக்கு ஆட்படும் பெண்களை மீட்டெடுக்க ஒவ்வொரு தொகுதியிலும் இலவச ரகசிய ஆலோசனை தரும் மனநல ஆலோசனை மையம் செயல்படுத்தப்படும்
திறமையான கல்லூரி மாணவிகளுக்கு (GPA 9.5-க்கு மேல்) இலவச மின்சார இருசக்கர வாகனம் வழங்கப்படும்
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 60% வாகன மானியம் வழங்கப்படும்
பெண் தொழில் முனைவோருக்கு, 'ஸ்மார்ட் சகோதரி' திட்டம் மூலம் இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும்
புதுவை சுய உதவிக் குழு தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்படும்; மேலும், SHE-MARTS அமைக்கப்பட்டு சுய உதவிக்குழு தயாரிப்புகள் விற்பனை செய்யப்படும்
சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை வட்டியில்லா கடன் தரப்படும்
பெண் தொழில்முனைவோருக்கு GST, FSSAI போன்ற வணிக உரிமங்களை துரிதமாக செயல்படுத்த தனித்துவமான ஒற்றைச் சாளர வணிக வசதி அமைக்கப்படும்
முன்னேறு வா தோழி திட்டத்தின் மூலம், பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க 50%மானியம் வழங்கப்படும்; மேலும் பேருந்து நிறுத்தங்களில் பிங்க் ஸ்டாண்டுகள் அமைக்கப்படும்
வித்யா இலவச மடிக்கணினி திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கும் இலவச மடிக்கணினி தரப்படும்
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மற்றும் சுய உதவிக்குழுப் பெண்களுக்கு இலவச மின்சார தையல் இயந்திரம் வழங்கப்படும்
தொழில் தொடங்கப் பெண்களுக்கு ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு, 50% மானியத்துடன் கடன் அளிக்கப்படும்
அரசு ஒப்பந்தங்களில் பெண்களுக்கு முன்பணம் விலக்கு அளிக்கப்படும்
பெண்கள் வீட்டிலும், வேலைத்தளத்திலும், பொதுவிடங்களிலும் பாதுகாப்பாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்
112 என்ற அவசர உதவி எண் மூலம், இடத்தைக் கண்டறிந்து உதவும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்
பெண்களின் அவசர அழைப்புக்கு 7 நிமிடங்களில் காவல் துறை உதவி
பள்ளி, கல்லூரி, தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் 50 SUV வாகனங்களும் 100 இருசக்கர வாகனங்களும் கொண்ட மகளிர் காவல் ரோந்து தனிச்சிறப்புப் படை உருவாக்கப்படும்
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கட்டாய தற்காப்புப் பயிற்சி
ஆட்டோ, டாக்ஸிகளில் GPS, அவசர பட்டன்கள் மூலம் பாதுகாப்பு கண்காணிப்பு வசதி உறுதிசெய்யப்படும்
இணைய வழித் தொல்லை, மார்ஃபிங் படங்களைக் கையாள சிறப்புப் பிரிவு அமைக்கப்படும்
பெண்கள் விடுதிகளுக்கு பாதுகாப்புச் சான்றிதழ் முறை அமல், மேலும் அங்கு 24 மணிநேரமும் பாதுகாப்புக் காவலர்கள் மூலம் பாதுகாப்பு விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்!
அனைத்து பொது சாலைகளிலும் 100% முழுமையான சிசிடிவி கண்காணிப்பு; AI அடிப்படையில் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் அனுப்பப்படும்
சந்தை, கடற்கரைப் பகுதிகளில் அவசர அழைப்பு பட்டன்கள் அமைக்கப்படும்; இதை அழுத்தினால் சைரன் ஒலித்து, பாதுகாப்புக்காக கதவு தானாக பூட்டப்பட்டு, காவல் துறையுடன் நேரடியாக வீடியோ காலில் பேசலாம்
பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க இலவச சட்ட உதவி மையம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 6 மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் வகையில், 2 தனி விரைவு நீதிமன்றங்கள்
Tags: அரசியல் செய்திகள்
